மத்திய பட்ஜெட் 2024-25 Live Updates.., இந்த தொகைக்கான பழைய வருமான வரி வழக்குகள் ரத்து!!

0
மத்திய பட்ஜெட் 2024-25 Live Updates.., இந்த தொகைக்கான பழைய வருமான வரி வழக்குகள் ரத்து!!
மத்திய பட்ஜெட் 2024-25 Live Updates.., இந்த தொகைக்கான பழைய வருமான வரி வழக்குகள் ரத்து!!

2024ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று (ஜன.31) தொடங்கிய நிலையில், இன்று (பிப்.1) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். மத்திய அமைச்சரவை கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்கிய நிலையில் 11 மணி வேளையில் நிர்மலா சீதாராம் பட்ஜெட்டை டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் சமர்பிக்க உள்ளார்.

ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் மத்திய பட்ஜெட் தாக்கல் இப்பொழுது பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று நடைபெறவுள்ளது. நிர்மலா சீதாராம் டிஜிட்டல் முறையில் பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கும் நிலையில் முக்கிய தலைவர்கள் பலரும் வருகை புரிந்துள்ளனர். தொடர்ந்து விவசாயிகள், அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள், சாமானிய மக்களுக்கு பல நலத்திட்டங்கள் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து வருகிறது.

மதியம் 12.08 PM

லோக்சபா நடவடிக்கைகள் நாளை காலை 11 மணிக்கு தொடங்கும்

மத்திய இடைக்கால பட்ஜெட் நிறைவேற்றப்பட்டது.

மதியம் 12.02 PM

57 நிமிடங்களில் 2024 இடைக்கால பட்ஜெட்டை வாசித்து முடித்தார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

காலை 11.58 AM

ரூ.25,000 வரையிலான பழைய வருமான வரி வழக்குகள் ரத்து

காலை 11.56 AM

இறக்குமதி வரி, நேரடி, மறைமுக வரி விதிப்பு விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை

காலை 11.55 AM

கடந்த 10 ஆண்டுகளில் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 2.4 % உயர்ந்துள்ளது

பாதுகாப்புத்துறையில் கடந்த ஆண்டு ரூ.5.9 லட்சம் கோடி, நடப்பு ஆண்டில் ரூ.11.1 லட்சம் கோடி ஒதுக்கீடு

அடுத்த 50 ஆண்டுகளில் திரும்ப செலுத்தும் வகையில் மாநிலங்கள் தோறும் வட்டியில்லா கடனாக ரூ.1.2 லட்சம் கோடி வழங்கப்படும்

காலை 11.50 AM

சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் விதமாக லட்சத்தீவில் உட்கட்டமைப்பு மற்றும் ஆன்மீக சுற்றுலா திட்டம் போன்றவை மேம்படுத்தப்படும்.

அடுத்த ஆண்டிற்குள் நாட்டின் நிதிப்பற்றாக்குறை 5.1%க்குள் கட்டுப்படுத்தப்படும்.

சாதாரண ரயில்களில் 40,000 பெட்டிகள் வந்தே பாரத் ரயில் பெட்டிகளை போல் மாற்றப்படும்.

காலை 11.42 AM

மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் வகையில் உற்பத்தி மற்றும் சார்ஜிங் மையம் அமைக்க திட்டம்

மீன்வளத்துறையில் 55 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு

காலை 11.39 AM

தொழில்நுட்ப துறை இளைஞர்களுக்கு பொற்காலமாக அமைய ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க திட்டங்களை ஊக்குவிக்க ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கீடு

காலை 11.35 AM

கர்ப்பப்பை, வாய்ப்புற்று நோயை தடுக்க தடுப்பூசி திட்டம் அறிமுகப்படுத்தப்படும்

விவசாய துறையில் அரசு மற்றும் தனியார் கூடுதல் முதலீடு செய்யும்

காலை 11.28 AM

சோலார் அமைத்தால் மாத்திற்கு 300 யூனிட் மின்சாரம் இலவசம்

நாடு முழுவதும் மருத்துவக்கல்லூரி அதிகரிப்பது தொடர்பாக தனிக்குழு

அரசின் தாரக மந்திரம் சீர்திருத்தம், செயலாக்கம், மாற்றம்

அடுத்த 5 ஆண்டுகளில் 2 கோடி வீடு கட்டித் தரப்படும்.

காலை 11.24 AM

அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக மாற்ற நடவடிக்கை

இந்தியா வளர்ந்த நாடு என்ற கனவு 2027ல் நனவாகும்.

இந்தியா திட்டத்தின் மூலம் 1.1 கோடி இளைஞர்கள் திறன்

பிரதான மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் மூலம் 70% பெண்கள் பயன். -நிர்மலா சீதாராமன் உரை

காலை 11.18 AM

பிரதான் மந்திரி காப்பீடு மூலம் 4 கோடி விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

பெண்களுக்கான இட ஒதுக்கீடு, முத்தலாக் தடை சட்டங்களால் மகளிர்கள் பயனடைந்துள்ளனர். -நிர்மலா சீதாராமன் உரை

காலை 11.14 AM

அனைவரையும் அரவணைக்கும் அரசாக பாஜக செயல்படுகிறது.

தேசிய கல்வி கொள்கையின் மூலம் கல்வித்துறையில் பெரும் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.

செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு பாராட்டு

78 லட்சம் தெருவோர வியாபாரிகள் பயனடைந்துள்ளனர். -நிர்மலா சீதாராமன் உரை

காலை 11.10 AM

அனைவருக்கும் வீடு, குடிநீர், மின்சாரம், இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கி 25 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டுள்ளோம்

சமூக நீதிதான் பிரதான குறிக்கோளாக கொண்டுள்ளது பா.ஜ.க. -நிர்மலா சீதாராமன்

அனைத்து மாநிலங்களுக்குமான வளர்ச்சி மற்றும் ஊழல் ஒழிப்பதையும் அரசின் குறிக்கோளாக உள்ளது.

நாட்டில் விவசாயிகள், இளைஞர்கள், ஏழைகள், பெண்கள் ஆகிய 4 பிரிவினருக்கு முக்கியத்துவம் வழங்கி உள்ளோம்.

2047-ல் புதிய இந்தியாவை படைப்போம்- நிர்மலா சீதாராமன்

காலை 11.08 AM

எங்களின் வளர்ச்சி பணிக்காக மீண்டும் எங்களை மக்கள் ஆட்சியில் அமர்த்துவர் என்ற நம்பிக்கை உள்ளது. ஏழை மக்கள் அனைவர்க்கும் எங்களின் வளர்ச்சி திட்டம் சென்றைடைந்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் வளர்ச்சி பெர்ம்பான்மையானது. நிர்மலா சீதாராமன் உரை

காலை 11.05 AM

கடந்த 10 ஆண்டுகளாக அனைத்து தரப்பு மக்களுக்கான திட்டங்கள் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டன;

காலை 11.02 AM

மக்களவையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரை

காலை 10.40 AM

டிஜிட்டல் முறையில் உருவான இடைக்கால பட்ஜெட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here