Union budget 2023 : ரயில் பயணிகளுக்கு பம்பர் லாட்டரி.., ரூ.2000 கோடி நிதியில் குவியும் வளர்ச்சித் திட்டங்கள்!!

0
Union budget 2023 : ரயில் பயணிகளுக்கு பம்பர் லாட்டரி.., ரூ.2000 கோடி நிதியில் குவியும் வளர்ச்சித் திட்டங்கள்!!
Union budget 2023 : ரயில் பயணிகளுக்கு பம்பர் லாட்டரி.., ரூ.2000 கோடி நிதியில் குவியும் வளர்ச்சித் திட்டங்கள்!!

நாளை தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட்டில், ரயில்வே சார்ந்த வளர்ச்சி பணிகளுக்கு ரூ.2000 கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எகிரும் எதிர்பார்ப்பு :

மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை நிதி அமைச்சர், மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். சிறு குறு விவசாயிகள், தொழில் முனைவோர் மற்றும் மாத சம்பளம் பெறுவோர் என அனைவருக்கும் இந்த பட்ஜெட்டில் சலுகைகள் குவிய உள்ளதாக சொல்லப்படுகிறது. அந்த வகையில், ரயில்வே சார்ந்த பல வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்தப் பணிகளுக்காக, வழக்கத்தைவிட 20-25% வரை அதிகமாக ரூபாய் 2000 கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிதியை, கொண்டு ஹைட்ரஜன் ரயில்கள், வந்தே பாரத் மற்றும் புல்லட் ரயில்கள் போன்றவை விரிவுபடுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது போக அம்ருத் பாரத் என்ற திட்டத்தின் கீழ், 1000க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களில் உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்(31.01.2023) – முழு விவரம் உள்ளே!!

சாமானிய மக்கள் ரயில் சேவையை அதிகம் பயன்படுத்துவதற்காக, ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் அவர்களுக்கான கட்டண விலையில் சலுகைகளை அளிக்கவும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இதனால் இனி ரயில் பயணம், பயணிகளுக்கு இனிமையானதாக மாறும் எனவும், அடித்தட்டு மக்களும் இதை பயன்படுத்த ஏதுவாக இருக்கும் எனவும் ரயில்வே அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here