மத்திய பட்ஜெட் 2023 இன்று தாக்கல் – நிர்மலா சீதாராமன் உரை!! Live Update!!

0

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில் இன்று நிர்மலா சீதாராமன் 2023-கான பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். மத்திய அமைச்சரவை கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்கிய நிலையில் 11 மணி வேளையில் நிர்மலா சீதாராம் பட்ஜெட்டை டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் சமர்பிக்கவுள்ளார்.

இப்பொழுது நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட சில முக்கிய பிரமுகர்களும் வருகை புரிந்துள்ளனர். மேலும் பொதுமக்கள் பலரும் இது குறித்த அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர். ஏற்கனவே பல மாநில முதல்வர்கள் தங்களது கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர். இந்த பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு, Work From Home ஊழியர்களுக்கான சலுகைகள், விவசாயிகளுக்கான சில சலுகைகள், தனிநபர் மற்றும் கல்விக்கடன் போன்றவற்றில் சலுகைகள் போன்றவை இடம் பெரும் என்று
எதிர்பார்ப்பு இருந்தது.

பட்ஜெட் 2023-2024 அப்டேட்

நிதி ஒதுக்கீடு.

  • ஊரகத்துறை – ரூ.1.60 லட்சம் கோடி
  • பாதுகாப்புத்துறை – ரூ.5.94 லட்சம் கோடி
  • போக்குவரத்துத்துறை – ரூ.2.70 லட்சம் கோடி
  • உணவு மற்றும் பொது விநோயோகம் – ரூ.2.06 லட்சம் கோடி
  • உள்துறை – ரூ.1.96 லட்சம் கோடி
  • ரசாயனம் மற்றும் உரத்துறை – ரூ.1.78 லட்சம் கோடி
  • வேளாண் துறை – ரூ.1.25 லட்சம் கோடி
  • ரயில்வே துறை – ரூ.2.41 லட்சம் கோடி
  • தகவல்துறை – ரூ.1.23 லட்சம் கோடி

: 38,800 புதிய ஆசிரியர்கள் நியமனம்

  • ஏகலைவா பள்ளிகளுக்கு 38,800 புதிய ஆசிரியர்கள் நியமிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியீடு
  • விவசாய கடன் இலக்கு ரூ.25 லட்சம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 வங்கிகள் சட்டம்

  • வங்கிகள் சட்டம் மற்றும்  ரிசர்வ் வங்கி சட்டங்களில் பல மாற்றங்கள் கொண்டுவரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • சுற்றுலா துறையை மேம்படுத்துவதாக புதிய திட்டமாக பிரத்யேகமாக செயலி உருவாக்கப்படவுள்ளதாக நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

  பாதுகாப்பு அமைச்சகத்திற்காக ரூ.5.94 லட்சம் கோடி ஒதுக்கீடு 

  • இந்த நிதி பட்ஜெட்டில், பாதுகாப்பு அமைச்சகத்திற்காக ரூ.5.94 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்தாண்டு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டிருந்த நிதியை காட்டிலும் 13 மடங்கு அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 பழங்குடியினர் மேம்பாட்டிற்கான திட்டம்

  • பழங்குடியினர் மேம்பாட்டிற்காக மூன்று ஆண்டுகளில் ரூ.15,000 கோடி நிதி ஒத்துக்கிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • மீனவர்கள் நலனுக்காக ரூ.6,000 கோடி ஒதுக்கீடு

 சுய தொழில்

  • சுய தொழில் செய்து மாதம் ரூ.58,520 வருமானம் ஈட்டுபவர்களுக்கு வருமான வரி கிடையாது.

மதியம் 1.00: ஐகோர்ட்டில் ரூ.7000 கோடி செலவில் 3 ஆம் கட்ட திட்டம் 

  • திறமைமிக்க நீதியை நிலைநாட்டுவதற்காக ஐகோர்ட்டில் ரூ.7000 கோடி செலவில் 3 ஆம் கட்ட திட்டம் தொடங்கப்பட இருப்பதாக நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

மதியம் 12.55 தங்கம், வெள்ளி, வைரம் விலை 

  • தங்கம், வெள்ளி, வைரம் போன்றவற்றின் விலை உயர இருப்பதாகவும், மொபைல் போன், கேமரா, டிவி உள்ளிட்ட பொருட்களின் விலை குறைய இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

மதியம் 12.50: மகிளா சம்மான்

  • புதிதாக மகிளா சம்மான் என்ற திட்டம் தொடங்கப்படும் என்றும், பெண்கள் பெயரில் 2 ஆண்டுகள் சேமிப்பு வைத்து கொள்ளும் விதமாகவும், 7% வட்டி வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மதியம் 12.45:தனிநபர் வருமான வரி

  • தனிநபர் வருமான வரியாக புதிய வரி விகிதங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது 0 முதல் ரூ. 3 லட்சம் பெறுபவர்களுக்கு 0% எனவும், 3 லட்சம் முதல் 6 லட்சம் பெறுபவர்களுக்கு 5% எனவும், 6 லட்சம் முதல் 9 லட்சம் பெறுபவர்களுக்கு 10% எனவும், 9 லட்சம் முதல் 12 லட்சம் பெறுபவர்களுக்கு 15% எனவும், 12 லட்சம் முதல் 15 லட்சம் பெறுபவர்களுக்கு 20% எனவும், 15 லட்சத்திற்கு மேல் வாங்குபவர்களுக்கு 30% எனவும் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார்.

மதியம் 12.35:சுங்க வரி

  • சிகரெட் மீதான சுங்க வரி அதிகப்பட்டுள்ளது. ஜவுளி மற்றும் விவசாயம் தவிர்த்து மற்ற பொருட்களுக்கான அடிப்படை சுங்கவரி வீத எண்ணிக்கையில் 21 லிருந்து 13 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

மதியம் 12.30

  • நிதி பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.4% ஆக உள்ளதாகவும் 2025-26 ஆம் ஆண்டிற்குள் 4.5% ஆக குறைப்பது தான் தனது நோக்கம் எனவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மதியம் 12.12: பான் கார்டு

  • கிச்சன் சிம்னிக்காக 7.5% லிருந்து 15% ஆக இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.
  • குறிப்பிடத்தக்க அரசு நிறுவனங்களில் உள்ள அனைத்து டிஜிட்டல் அமைப்புகளுக்கும் பான் கார்டு பொதுவான அடையாளங்காட்டியாக பயன்படுத்தப்படும்

காலை 11.55 மணி: ரயில்வே துறை

  • Make AI in India, Make AI For India, போன்றவற்றில் திட்டத்தை செயல்படுத்த சிறந்த கல்வி நிறுவனங்களில் மூன்று சிறப்பு மையங்கள் அமைக்கப்படும் என்று அறிவிப்பை வெளியிட்டுள்ளார் நிர்மலா சீதாராம்.
  • ரயில்வே துறைக்கு இதுவரை இல்லாத விதமாக 2.40 லட்சம் முதலீடு செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.

காலை 11.50 மணி 

  • மாநில அரசுகளுக்கு 50 ஆண்டு வட்டியில்லாத கடன் வழங்கப்பட்டிருந்த நிலையில் அதனை மேலும் ஒரு ஆண்டாக நீடித்திருப்பதாகவும், அனைத்து நகரங்களில் உள்ள கழிவு நீர் தொட்டிகளை 100% சரி செய்து மெஷின் ஹோல் முறையில் மாற்ற முடியும் என்றும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் நிர்மலா சீதாராமன்.

காலை 11.37 மணி: விவசாய வளர்ச்சியை மேம்பாடு

  • விவசாயிகளுக்காக கால்நடை வளர்ப்பு, மீன்வளம் மற்றும் பால் வளம் போன்றவற்றில் அதிக கவனம் செலுத்தி கடன் இலக்கில் ரூ. 20 லட்சமாக உயர்த்தப்படும் என்றும் கூப்பட்டுள்ளது. மேலும் விவசாய வளர்ச்சியை மேம்படுத்த ஸ்டார்ட்டப் நிறுவனங்களுக்கு நிதி ஒதுக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலை 11.30 மணி: சுற்றுலாவை ஊக்குவிக்க.

  • 7 முக்கிய அம்சங்கள் கொண்ட பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், சுற்றுலாத்துறைக்கும், ஒருங்கிணைந்த வளர்ச்சி போன்றவற்றிற்கும் தனியாக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
  • சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில், தனியார் மற்றும் மாநிலங்கள் ஒன்று சேர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
  • புதிதாக 157 செவிலியர் கல்லூரிகள் உருவாக்கப்படும்

காலை 11 மணி – நிர்மலா சீதாராமன் உரை

  • 11 மணி வேளையில் தொடங்கப்பட்ட பட்ஜெட் தொடரில் நிர்மலா சீதாராமன் தனது உரையை தொடங்கியுள்ளார். மத்திய பட்ஜெட்டை 5 முறையாக தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன், இந்தியா நடப்பாண்டு பொருளாதார வளர்ச்சியில் 7% அதிகரித்திருப்பதாகவும், இது மற்ற வளர்ந்து வரும் நாடுகளை விட அதிகம் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த பட்ஜெட் பெண்கள், இளைஞர்கள், விவசாயிகளுக்கான பட்ஜெட்டாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
  • இந்திய பொருளாதாரம் உலக நாடுகள் பாராட்டும்படியாக இருப்பதாகவும், நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பதாகவும், நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார்.
  • விவசாயிகளுக்கு பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் 11.4 கோடி உதவித்தொகை வங்கிக்கணக்குகளில் நேரடியாக வழங்கப்பட்டது என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here