தமிழக பள்ளி மாணவர்களுக்கு பேருந்தில் இந்த சலுகை கொடுக்க வேண்டும்.., மீறினால் நடவடிக்கை!!

0
தமிழக பள்ளி மாணவர்களுக்கு பேருந்தில் இந்த சலுகை கொடுக்க வேண்டும்.., மீறினால் நடவடிக்கை!!
தமிழக பள்ளி மாணவர்களுக்கு பேருந்தில் இந்த சலுகை கொடுக்க வேண்டும்.., மீறினால் நடவடிக்கை!!

தமிழகத்தில் ஜூன் 7 ஆம் தேதி கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்க உள்ளதால், மாணவர்களுக்கான இலவச பஸ் பாஸ் ஜூன் மாதம் வழங்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் சமீபத்தில் அறிவித்திருந்தார். தற்போது இதை தொடர்ந்து தமிழக போக்குவரத்து துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதாவது மாணவர்கள் பஸ் பாஸுடன் வந்தாலும் அவர்களை பல நடத்துனர்கள் பேருந்தில் ஏற்றுவது இல்லை. மேலும் அவர்களை பாதியில் இறக்கி விடுவது போன்ற சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகிறது. இதனால் இது போன்ற சம்பவம் நடப்பு கல்வி ஆண்டில் அரங்கேறாமல் இருக்க, பள்ளி சீருடையுடன் வரும் மாணவர்களை பேருந்தில் ஏற்ற அனுமதிக்க வேண்டும்.

அரசு ஊழியர்களுக்கு அடுத்த 3 மாதத்திற்குள் பதவி உயர்வு…, மத்திய நிர்வாக தீர்ப்பாயம் அறிவிப்பு!!

ஒரு வேலை மாணவர்களை பேருந்தில் ஏற்றாமல் இறக்கிவிட்டாலோ, பேருந்தை நிறுத்தாமல் சென்றாலோ நடத்துனர் மற்றும் ஓட்டுநர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here