2020, மார்ச் 22 நியாபகம் இருக்கா மக்களே.., கொரோனா ஊரடங்கு போடப்பட்ட தினம் இன்று!!

0
2020, மார்ச் 22 நியாபகம் இருக்கா மக்களே.., கொரோனா ஊரடங்கு போடப்பட்ட தினம் இன்று!!
2020, மார்ச் 22 நியாபகம் இருக்கா மக்களே.., கொரோனா ஊரடங்கு போடப்பட்ட தினம் இன்று!!

கடந்த 2019ம் ஆண்டு சீனாவின் வுஹான் நகரில் இருந்து தொடங்கிய கொரோனா தொற்று பரவல் சர்வதேச நாடுகளையும் நிலைகுலைய செய்தது. இதன் வீரியத்தை கட்டுக்குள் கொண்டு வர ஊரடங்கு, முகக்கவசம், சோசியல் டிஸ்டன்ஸ் உள்ளிட்ட நடவடிக்கைகள் சுகாதார மையம் அறிவுறுத்தலின் படி உலகெங்கும் அமல்படுத்தப்பட்டது. இப்படி இந்தியாவில் ஊரடங்கு என்ன? என தெரியாமல் இருந்தவர்களுக்கு 2020ம் ஆண்டு முதல் முறையாக ஊரடங்கு இன்றைய (மார்ச் 22) நாள் தான் பிறப்பிக்கப்பட்டது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அன்றைய நாள் மாலை 5 மணியளவில் பிரதமர் மோடி வேண்டுகோள் படி பால்கனியில் நின்று “கோ கொரோனா கோ” என கைதட்டி கொட்டடிச்சதெல்லாம் மறக்க முடியாத நிகழ்வுகளாக இன்றளவும் ஊடகங்களில் அவ்வப்போது மீம்ஸ்கள் வலம் வந்த வண்ணம் உள்ளது.. இதன்மூலம் உணவு, நிதி பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு விதமான சிக்கல்களில் பொதுமக்கள் சிக்கி தவித்தனர். தற்போது தடுப்பூசி உள்ளிட்ட கட்டுப்பாடுகளால் இந்தியா போன்ற சில நாடுகளில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. இருந்தாலும் சீனா, ஜப்பான் போன்ற சில நாடுகளில் கொரோனா வைரஸ் பரிணாம வளர்ச்சி அடைந்து பொதுமக்களை பாதித்து வருகிறது.

ஐஸ்வர்யா வீட்டில் திருடு போன நகைகள் மீட்பு.., கூட இருந்தே குழி பறித்த டிரைவர்,சமையல்காரி.., காவல்துறை அதிரடி நடவடிக்கை!!

இதன் அடிப்படையில் இதுவரை கொரோனா தொற்றால் 68 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 68 லட்சம் பேர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே சர்வதேச நாடுகளும் மீண்டும் இதுபோன்ற ஒரு நிகழ்வை சந்திக்க கூடாது என அனுதினமும் வேண்டிக்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here