இந்தியாவில் உயரும் வேலையின்மையின் விகிதம்., மத்திய அரசு என்ன செய்கிறது? காங்கிரஸ் தலைவர் குற்றச்சாட்டு!!

0

இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தற்போது நாட்டில் நிலவும் வேலையின்மை பிரச்சனை குறித்து பேசியுள்ளார். அதாவது இந்தியாவில் பணவீக்கம் மற்றும் மந்த நிலை நிலவி வருகிறது. இப்படி இருக்க பாஜக அரசு வேலையின்மை கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது. மேலும் பதவி உயர்வு, ஆட்சேர்ப்பு முடிந்து விட்டது போன்ற தகவலை தெரிவித்து வருகிறது. மத்திய அரசின் இந்த செயல் வேலையில்லா இளைஞர்களின் மனதில் நம்பிக்கையை இழக்க செய்துள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

இதோடு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தின் கீழ் 20% ஆட்சேர்ப்புக்கான தேவை அதிகரித்துள்ளது. மேலும் பட்டதாரி இளைஞர்களிடையே உள்ள வேலையின்மை விகிதம் 13.4 % மாக உயர்ந்துள்ளது. இதனால் வரப்போகும் மக்களவை தேர்தலில் பாஜக அரசுக்கு வேலையில்லா இளைஞர்கள் தங்களின் ஆதரவு தெரிவிக்க மாட்டார்கள் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

மக்களே.., நாளை இந்த பகுதியில் கரண்ட் கட்.., உங்க ஏரியா இருக்கான்னு பார்த்துக்கோங்க – வெளியான முக்கிய அறிவிப்பு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here