தமிழக இளைஞர்களே., அரசு வேலையில்லா குடும்பத்தை சேர்ந்தவருக்கு வேலை., பாஜக அண்ணாமலை வெளியிட்ட தகவல்!!!

0

பாஜக மாநிலத்தலைவரான அண்ணாமலை, கடந்த ஜூன் மாதம் முதல் “என் மண், என் மக்கள்” யாத்திரை மேற்கொண்டு வருகிறார். இந்த யாத்திரை நிறைவு விழா நாளை (பிப்.27) திருப்பூரில் நடைபெற இருப்பதால், பிரதமர் மோடியும் கலந்து கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் விழுப்புரம் கூட்டேரிப்பட்டு பகுதியில் யாத்திரை மேற்கொண்ட அண்ணாமலை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதாவது கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் நல்லாட்சியை பாஜக தந்து வருகிறது. இதன் விளைவாக வரும் லோக்சபா தேர்தலில் 400 தொகுதிகளில் வெற்றி பெற்று, மீண்டும் நரேந்திர மோடி பிரதமராக உள்ளார். அதைத்தொடர்ந்து தமிழகத்தில் அரசு வேலையில்லாத குடும்பத்தை சேர்ந்த படித்த இளைஞர்களுக்கு, வேலை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு விரைவில் கொண்டு வர உள்ளது. இதனால் பல லட்சக்கணக்கான இளைஞர்கள் பயனடைவார்கள்.” என தெரிவித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு.., இந்த பகுதியில் திடீரென போக்குவரத்து மாற்றம்.., முழு விவரம் இதோ!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here