பாகிஸ்தானில் விக்கிபீடியாவிற்கு விதிக்கப்பட்ட தடைக்கு விலக்கு.., பிரதமர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

0

சமீபகாலமாக இஸ்லாமிய மதத்திற்கு எதிராக இருக்கும் பல்வேறு இணையத்தளங்களை பாகிஸ்தான் அரசு முடக்கி வருகிறது. இதையடுத்து இஸ்லாமிய மத நிபந்தனைகள் குறித்து தவறான பதிவுகள் உள்ளது என விக்கிபீடியா தளம் பாகிஸ்தானில் முடக்கப்பட்டது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதுகுறித்து விக்கிபீடியா நிறுவனம் கூறுகையில், “கருத்துக்களை வெளிப்படுத்தும் உரிமைக்கு எதிராக பாகிஸ்தான் அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. உலக நாடுகளின் கலாச்சார பண்பாடு உள்ளிட்ட இணையவழி தகவல் களஞ்சியமாக விக்கிபீடியா தளம் செயல்படுகிறது. உலகம் முழுவதும் தன்னார்வலர்களால் இங்கு கருத்துக்கள் பதிவிடப்படுகிறது.

துருக்கி, சிரியா மக்களுக்கு உதவ ஒன்றிணைவோம்., களத்தில் இறங்கிய முதல்வர் ஸ்டாலின்!!

இதனால் இங்கு உள்ள பதிவுகளை நீக்கவோ, திருத்தவோ எங்களுக்கு அதிகாரம் இல்லை.” என பதிலளித்திருந்தனர். இதைத்தொடர்ந்து விக்கிபீடியாவுக்கு எதிராக விதித்த தடைகளை அகற்ற பாகிஸ்தான் நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here