நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்திய அணியில் இணையும் உம்ரான்., காரணம் என்ன தெரியுமா??

0

T20 உலக கோப்பை தொடரில் பேக்கப் வீரர் முகமது ஷமிக்கு பதில் புதிய வேக பந்து வீச்சாளரை களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முகமது ஷமி VS உம்ரான் மாலிக்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணி வெற்றி பெற்றதை தொடர்ந்து, அடுத்ததாக தென்னாபிரிக்க தொடருக்கு தயாராகி வருகிறது. மேலும் இந்த தொடருக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இடம்பிடித்துள்ளார். ஆனால் அவருக்கு தற்போது கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் இவர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான T20 போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் இவர் T20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் இடம்பெற்றுள்ளார். இதனால் உலக கோப்பை தொடருக்கு முன்னதாகவே சரியான சிகிச்சை மேற்கொண்டு தனது பார்மை நிரூபித்தால் மட்டுமே உலக கோப்பை தொடரில் பங்கேற்க முடியும். ஆனால் அவர் இருக்கும் நிலைமையை பார்த்தால் இந்திய அணிக்காக விளையாடுவது கேள்விக்குறியாக உள்ளது.

இதன் காரணமாக BCCI தற்போது மாற்று ஏற்பாடு ஒன்றை மேற்கொண்டுள்ளனர். அதாவது IPL தொடரில் அதிரடியாக விளையாடிய உம்ரான் மாலிக்கை, முகமது ஷமிக்கு பதில் T20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் எடுக்க முடிவெடுத்துள்ளனர். உம்ரான் IPL தொடருக்கு பிறகு இந்திய அணிக்காக ஒரு சில போட்டிகளில் விளையாடினார். அதன் பிறகு தற்போது தான் அவரை அணியில் எடுக்க BCCI முடிவெடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here