அறிமுக போட்டியில் அசத்திய உம்ரான் மாலிக்…, 153 கி மீ வேகத்தில் வீழ்ந்த முக்கிய விக்கெட்டுகள்!!

0
அறிமுக போட்டியில் அசத்திய உம்ரான் மாலிக்..., 153 கி மீ வேகத்தில் வீழ்ந்த முக்கிய விக்கெட்டுகள்!!
அறிமுக போட்டியில் அசத்திய உம்ரான் மாலிக்..., 153 கி மீ வேகத்தில் வீழ்ந்த முக்கிய விக்கெட்டுகள்!!

நியூசிலாந்துக்கு எதிரான தனது அறிமுக போட்டியிலேயே முக்கியமான 2 விக்கெட்டுகளை கைப்பற்றி உம்ரான் மாலிக் அசத்தி உள்ளார்.

உம்ரான் மாலிக்:

நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் ஆட்டம் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில், ரசிகர்கள் அனைவரும் மிகவும் எதிர்பார்த்த, சஞ்சு சாம்சன் மற்றும் உம்ரான் மாலிக் இருவரும் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம் பிடித்திருந்தனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த போட்டியானது, இளம் வீரரான உம்ரன் மாலிக்கு சர்வதேச ஒருநாள் தொடரின் அறிமுக போட்டியாகும். தனது அறிமுக போட்டியின் முதல் ஓவரிலேயே 149.6 கி மீ வேகத்தில் பந்து வீச ஆரம்பித்தார். இவரது அதிவேக பந்து வீச்சால், நியூசிலாந்தின் மிக முக்கிய விக்கெட்டான, டெவோன் கான்வே 24 ரன்களில் வீழ்த்தினார். இவரை தொடர்ந்து, டேரில் மிட்செலும் உம்ரான் மாலிக்கின் 153.1 கி மீ வேகத்தில் சிக்கி 11 ரன்களில் வெளியேறினார்.

IND vs NZ: 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்த இந்தியா…, அதிரடியாக சதம் விளாசிய டாம் லதாம்!!

இந்த போட்டியில், இவர் வீசிய முதல் 5 ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தி உள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான இந்த போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினாலும், சஞ்சு சாம்சன் மற்றும் உம்ரான் மாலிக் களமிறங்கியது ரசிகர்களுக்கு ஒரு வித மகிழ்ச்சியை தந்தாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here