தமிழக வீரர் வாய்ப்பை பறித்த உமேஷ்.., இந்திய அணியில் ஏற்பட்ட குழப்பம்.., நடந்தது என்ன??

0
தமிழக வீரர் வாய்ப்பை பறித்த உமேஷ்.., இந்திய அணியில் ஏற்பட்ட குழப்பம்.., நடந்தது என்ன??
தமிழக வீரர் வாய்ப்பை பறித்த உமேஷ்.., இந்திய அணியில் ஏற்பட்ட குழப்பம்.., நடந்தது என்ன??

முகமது ஷமி இந்திய அணியில் இருந்து விலகியதால், அவருக்கு பதிலாக உமேஷ் யாதவ் அணியில் இடம் பிடித்துள்ளார்.

இந்திய அணி

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் T20 தொடருக்கான முதல் போட்டி நாளை மொகாலியில் தொடங்க உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்த முகமது ஷமிக்கு தற்போது கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் இந்த தொடரில் இருந்து முகமது ஷமி விலகியுள்ளார். அவருக்கு பதில் மாற்று வீரராக ஃபாஸ்ட் பவுலர் உமேஷ் யாதவ் அணியில் இடம் பிடித்துள்ளார்.

இவர் கடைசியாக கடந்த 2019 பிப்ரவரியில் நடைபெற்ற சர்வதேச டி20 போட்டியில் இந்திய அணிக்காக விளையாடினார். அதன் பிறகு கிட்டத்தட்ட மூன்றரை ஆண்டுகள் கழித்து மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் உமேஷ் யாதவுக்கு வாய்ப்பு வழங்கியது குறித்து BCCI மீது சிலர் அதிக கோபத்தில் உள்ளனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஏனென்றால் அவரை விட சிறப்பான ஃபார்மில் இருக்கும் தமிழக வீரர் நடராஜனை பிசிசிஐ தேர்வாளர்கள் புறக்கணித்துள்ளனர். இவர் IPL மற்றும் சர்வதேச போட்டிகளில் அதிரடியான பர்ஃபாமென்ஸை வெளிப்படுத்தியுள்ளார். ஆனாலும் இவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. மேலும் நடராஜன் கடந்த ஒரு வருடமாக இந்திய அணியில் இருந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறார். ஆனால் இதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here