
நடிகர் விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் குறித்து பாலிவுட் விமர்சகர் உமர் சந்துரு தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியீட்டு சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
நடிகர் விஜய்:
தமிழ் சினிமாவின் ஐகானிக் ஹீரோவாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். தற்போது லோகேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தில் நடித்து வருகிறார். பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின் ஷூட்டிங் தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து சமீபகாலமாக விஜய்யை குறித்து பல சர்ச்சைகள் கிளம்பின.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதில் ஒன்றாக நடிகை கீர்த்தி சுரேஷை விஜய் காதலித்து வருவதாகவும், அதற்காக சங்கீதாவை விவாகரத்து செய்ததாகவும் சர்ச்சை கிளம்பியது. ஆனால் நாளைடைவில் இது ஒரு பொய்யான தகவல் என்று தெரிய வந்தது. இந்நிலையில் பாலிவுட் விமர்சகர் உமர் சந்துரு தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
அதாவது அந்த பதிவில், தளபதி விஜய் நடிகை கீர்த்தி சுரேஷுக்கு விலை உயர்ந்த கார் ஒன்றை பரிசாக வழங்கியதாகவும் இந்த விஷயம் சங்கீதாவிற்கும் தெரியும் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் இது முற்றிலும் பொய்யான தகவல் என்று தற்போது தெரியவந்துள்ளது. உமர் சந்துரு பேமஸ் ஆவதற்காக இந்த மாதிரி முன்னணி பிரபலங்களை தாக்கி பதிவிட்டு வருகிறார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.