கொரோனாவால் பாதிக்கப்பட்ட குக் வித் கோமாளி பிரபலம் – தட்டுத்தடுமாறி அவரே வெளியிட்ட வீடியோ!!

0

கொரோனா தொற்று தற்போது நாளுக்கு நாள் பரவி வரும் நிலையில் மக்கள் பலரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் திரையுலக பிரபலமான உமாரியாஸ் தட்டுத்தடுமாறி தனக்கு வந்த கொரோனா பற்றி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கொரோனா

இந்தியாவில் இரண்டாவது அலையான கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாள் ஒன்றுக்கு பாதிப்பு லட்சக்கணக்கிலும், உயிரிழப்பு ஆயிரக்கணக்கிலும் இருந்து வருகிறது. இதனால் மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை எடுத்து தான் வருகிறது. அப்படி இருந்தும் தொற்று நாளுக்கு நாள் பரவி தான் வருகிறது. பிரபலங்களையும் இந்த கொரோனா தொற்று விட்டு வைக்கவில்லை. அந்த வகையில் பிரபல நடிகையான உமா ரியாஸுக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது. இதனை அவர் வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதாவது தொடர்ந்து கொரோனா தொற்று ஏற்கனவே கண்டறியப்பட்டதாகவும், உடனே மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்றதாகவும் சொல்லி இருக்கிறார். தற்போது கொரோனாவில் இருந்து விடுபட்டுள்ளதாகவும் சொல்லி இருக்கிறார். ஆனால் அவரால் நார்மலாக பேச முடியவில்லை. மூச்சி திணறலுடன் தான் பேசி இருக்கிறார். தனக்கு மருத்துவம் பார்த்து குணப்படுத்திய டாக்டர்களுக்கு மிகவும் நன்றி என்றும் கூறியுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here