சின்னம்மா சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்க வேண்டும் – மனித சங்கிலி போராட்டம் நடத்திய அதிமுகவினர்!!!

0
சின்னம்மா சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்க வேண்டும் – மனித சங்கிலி போராட்டம் நடத்திய அதிமுகவினர்!!!
சின்னம்மா சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்க வேண்டும் – மனித சங்கிலி போராட்டம் நடத்திய அதிமுகவினர்!!!

அஇஅதிமுக கட்சியின் பொதுச்செயலாளராக சின்னம்மா சசிகலாவை பொறுப்பேற்க சொல்லி உளுந்தூர்ப்பேட்டை வட்டாச்சியர் அலுவலகம் முன் அதிமுக கட்சியை சேர்ந்த சிலர் சற்றுமுன் மனித சங்கிலி போராட்டம் நடத்தியுள்ளனர். இவர்களது போராட்டம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சசிகலாவிற்கு ஆதரவாக மனித சங்கிலி போராட்டம்…

அஇஅதிமுக கட்சி கடந்த பத்து ஆண்டுகளாக தமிழகத்தில் ஆட்சியமைத்து வந்தது. அஇஅதிமுக கட்சியின் தலைமையாக மறைந்த முன்னாள் முதலவர் செல்வி ஜெ.ஜெயலலிதா இருந்தார். கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜெயலலிதா அவர்களை மறைந்தார். அவர் மறைவிற்கு பின் சின்னம்மா சசிகலா அவர்கள் அஇஅதிமுக கட்சியை கைப்பற்றி வலிவழி நடத்தி வந்தார். கட்சியின் பொது செயலாளராகவும் பொறுப்பேற்று வந்தார். அப்பொழுது 2017 ஆம் ஆண்டு சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டார்.

சசிகளவிற்கு ஆதரவாக மனித சங்கிலி போராட்டம்...
சசிகளவிற்கு ஆதரவாக மனித சங்கிலி போராட்டம்…

பின் அவரை பெங்களூர் சிறையில் அடைத்தனர். சசிகலா சிறை சென்றதால் சசிகலாவையும், டி டி வி தினகரனையும் கட்சியின் பொறுப்பில் இருந்தும் பதவியில் இருந்தும் நீக்கினார். பின் அதிமுக கட்சியை யாரு வழி நடத்துவது யாரு தலைமை கொள்வது நின்ற உள்கட்சி மோதல் ஏற்பட்டது. பின் கட்சியின் பொது கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு தலைவைர் என்ற பதவியை எடுத்துவிட்டு ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் என்று இரு பதவிகளை கொண்டு வரப்பட்டது. ஓ.பன்னிர்செல்வம் அவர்களை ஒருங்கிணைப்பாளராகவும் எடப்பாடி பழனிசாமியை துணை ஒருங்கிணைப்பாளராகவும் தேர்ந்துடுத்தனர்.

சசிகளவிற்கு ஆதரவாக மனித சங்கிலி போராட்டம்...
சசிகளவிற்கு ஆதரவாக மனித சங்கிலி போராட்டம்…

இதற்கு அவைத்தலைவராக மதுசூதனன் இருந்துள்ளார். பின் இந்த பொது குழு கூட்டம் செல்லாது என்று சசிகலா அவர்கள் சிறையில் இருந்தபோது சென்னை உரிமையியல் நீதிமடத்தில் வழக்கு தொடர்ந்தார், இந்த வழக்கு விசாரணையும் நடந்து வருகிறது. சில மாதங்களுக்கு முன் சசிகலா அவர்கள் சிறை தண்டனை முடிந்து வெளியே வந்தார். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னிர்செல்வமும் அதிமுக கட்சிக்கும் சசிகலாவுக்கு எந்த சம்மந்தமும் இல்லை என்று கூறி வருகின்றனர். அதேபோல் இரண்டு நாட்களுக்கு முன் செய்தியாளர்களை சந்தித்த ஓ. பன்னிர்செல்வம் அவர்கள் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தின் போது சசிகலாவை அதிமுக பொது செயலாளர் பதவியில் இருந்து முழுமையாக நீக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் அதிமுக கட்சியை பொறுத்தவரை குடும்ப அரசியல் தனி ஆளுமை எதுவும் இல்லை.

சசிகலாவிற்கு ஆதரவாக மனித சங்கிலி போராட்டம்...
சசிகலாவிற்கு ஆதரவாக மனித சங்கிலி போராட்டம்…

அதேபோல் அதிமுக கட்சியை யாறலாலும் எப்பொழுதும் கைப்பற்ற முடியாது என்று கூறினார். இதற்கு எதிர்ப்பாக இப்பொழுது உளுந்தூர்பேட்டையில் பரபரப்பான சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளது. அதிமுக கட்சியின் பொது செயலாளராக சசிகலா அவர்களை பொறுப்பேற்க கூறி அதிமுக கட்சியினை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் உளுந்தூர்பேட்டை வட்டாச்சியர் அலுவலகம் முன் மனித சங்கிலி போராட்டம் நடத்தி வருகின்றனர், இந்த போரத்தினால் அந்த பகுதியே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here