என்ன ஆண்டவரே இது.., ஆள், கெட்டப் எல்லாமே மாறிடுச்சு.., புதிய பரிணாமத்துக்கு மாறிய கமல்!!

0
என்ன ஆண்டவரே இது.., ஆள், கெட்டப் எல்லாமே மாறிடுச்சு.., புதிய பரிணாமத்துக்கு மாறிய கமல்!!
என்ன ஆண்டவரே இது.., ஆள், கெட்டப் எல்லாமே மாறிடுச்சு.., புதிய பரிணாமத்துக்கு மாறிய கமல்!!

உலக நாயகன் கமல்ஹாசன் கதர் ஆடை அணிந்து எடுத்து கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் கமல்ஹாசன்:

திரையுலகில் தவிர்க்க முடியாத பன்முக திறமைகளை கொண்ட நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் தான் உலகநாயகன் கமல்ஹாசன். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்நிலையில் கதர் ஆடை அணிந்து எடுத்து கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதாவது கடந்த 2020ம் ஆண்டு ‘KH House of Khadar’ என்ற தொழில் குதித்தார். இந்த நிறுவனம் வெறும் வருமானம் ஈட்டுவதற்காக மட்டும் தொடங்காமல், துணி நெய்தல் மற்றும் நெசவு தொழிலாளர்களின் கஸ்டங்களை போக்கும் விதமாக பிக்பாஸ் சீசன் 4 இறுதி நாள் அன்று மக்களுக்கு அறிமுகப்படுத்தினார்.

இதற்காக காஸ்டியூம் டிசைனர் மற்றும் ஸ்டைலிஸ்ட் அமிர்தா ராம் என்பவருடன் கை கோர்த்து பிராண்டில் விதவிதமான கதர் ஆடைகளை தயாரித்து வருகின்றனர். மேலும் ‘KH House of Khadar’ பிராண்ட் உடைய ஆன்லைன் இந்த ஆண்டு ஜனவரி மாதம் குடியரசு தினத்தன்று தொடங்கியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் புதிதாக தயாரித்த கதர் ஆடையை அணிந்து போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here