மாணவர்களின் கல்லூரிக் கட்டணம்.,, யு.ஜி.சி வெளியிட்ட அதிரடி உத்தரவு.,,பெற்றோர்கள் நிம்மதி!!

0

மாணவர்கள் கல்லூரியில் இருந்து பாதியில் வெளியேறினாலும், அவர்களுக்கு கட்டணத்தை கல்வி நிறுவனங்கள் திருப்பித் தர வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவிட்டுள்ளது.

யு.ஜி.சி அதிரடி உத்தரவு:

இந்தியாவில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் ஆகியவற்றை கட்டுப்படுத்தும் அமைப்பாக ‘யுஜிசி’ எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு உள்ளது. இந்நிலையில் பல்கலைக்கழக மானிய குழு இந்தியா முழுவதும் உள்ள கல்லூரிகளுக்கு எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதில் கல்லூரிகளில் படித்து வரும் மாணவர்கள் பாதியில் கல்லூரியை விட்டு விலகும் சூழல் ஏற்பட்டால், நிர்வாகம் மாணவர்களுக்கு கட்டணம் மற்றும் சான்றிதழ்களை திரும்ப வழங்க வேண்டும். மேலும் இந்த விதிகளை மீறும் உயர்கல்வி நிறுவனங்களின் Acknowledgment திரும்பப் பெறப்படும் என ‘யுஜிசி’ எச்சரிக்கை விடுத்துள்ளது.

பங்களாதேஷை எதிர்கொள்ளும் இந்தியா…, அரையிறுதிக்கு முன்னேற போவது யார்??

இதனால் உயர்கல்வி நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்திக்க நேரிடும் என குறிப்பிடப்பட்டு உள்ளது. அதாவது நிதி சுமை, பொது நுழைவுத்தேர்வு எழுதியுள்ள மாணவர்கள், முடிவுகள் வெளியான பிறகு கல்லூரிச் சேர்க்கை மாறுதல், பாடத்திட்டம் கடினமாக இருத்தல் உள்ளிட்ட காரணங்களால் மாணவர்கள் பாதியில் வெளியேறும் போது, கட்டணம் மற்றும் சான்றிதழ்கள் கல்வி நிறுவனம் சார்பில் திருப்பி அளிக்கப்படுவதில்லை என பெற்றோர்கள், மாணவர்கள் மத்தியில் தொடர்ந்து புகார் வந்த வண்ணம் உள்ளது. இதை கருத்தில் கொண்டு இந்த எச்சரிக்கை அறிவிப்பு வெளியாகி உள்ளதாக சொல்லப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here