UEFA யூரோபா லீக்.., மோசமான தோல்வியை சந்தித்த மான்செஸ்டர் யுனைடெட்.., உங்க அணிக்கு இப்படி ஒரு நிலைமையா?

0
UEFA யூரோபா லீக்.., மோசமான தோல்வியை சந்தித்த மான்செஸ்டர் யுனைடெட்.., உங்க அணிக்கு இப்படி ஒரு நிலைமையா?
UEFA யூரோபா லீக்.., மோசமான தோல்வியை சந்தித்த மான்செஸ்டர் யுனைடெட்.., உங்க அணிக்கு இப்படி ஒரு நிலைமையா?

யூரோபா கால்பந்து லீக் ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருவதால் அந்த அணி ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.

மான்செஸ்டர் VS ரியல் சோசிடாட்!!

UEFA யூரோபா லீக் தொடருக்கான இன்று நடைபெற்ற ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணி மற்றும் ரியல் சோசி டாட் ஆகிய அணிகள் மோதியது. இதில் மான்செஸ்டர் அணி இதற்கு முன்பு நடைபெற்ற ஆட்டத்தில் ஆர்சனல் அணியுடன் 2 – 1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. இதனால் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெரும் என ரசிகர்கள் அனைவரும் நினைத்தனர். ஆனால் மான்செஸ்டர் அணி ரசிகர்கள் அனைவருக்கும் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

அதாவது ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்து இரு அணிகளும் சிறப்பாக விளையாடி வந்த நிலையில் மான்செஸ்டர் அணி வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு கோல் அடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதை பயன்படுத்திய போதிலும் எதிரணி கோல் கீப்பர் அதை எளிதாக தடுத்தார். இதனால் ஆட்டத்தின் முதல் பாதி 0-0 என முடிந்தது. இதனை தொடர்ந்து நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தில் சோசி டாட் அணி வீரர் பிரைஸ் மெண்டஸ் 59வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்றினார்.

இதனால் ஆட்டத்தின் முடிவில் 1 – 0 என்ற கணக்கில் ரியல் சோசி டாட் அணி வெற்றி பெற்றது. இதில் தோல்வி அடைந்த மான்செஸ்டர் அணி ஹாட்ரிக் தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. ஒரு காலத்தில் தொடர் வெற்றிகளை சந்தித்து வந்த இந்த அணி தற்போது தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. இதனால் மான்செஸ்டர் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here