UEFA சாம்பியன்ஸ் லீக்: எதிரணியை கோல் அடிக்க விடாமல் தடுத்து அசத்திய லிவர்பூல்!! 

0
UEFA சாம்பியன்ஸ் லீக் தொடரில் நபோலி அணியை ஒரு கோல் கூட அடிக்கவிடாமல் லிவர்பூல் அணி 2 கோல்கள் அடித்து வெற்றி பெற்றது.

UEFA சாம்பியன்ஸ் லீக்:

உலக கோப்பை கால்பந்து தொடருக்கு முன்பாக அனைத்து அணிகளும் பல்வேறு லீக் தொடர்களில் பங்கு பெற்று விளையாடி வருகின்றன. இந்த வகையில் லிவர்பூல் அணியானது UEFA சாம்பியன்ஸ் லீக் தொடரில், நபோலி அணியை எதிர்த்து விளையாடியது. இதில், இரு அணிகளும் சம பலத்துடன் இருந்ததால், ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் ஒரு கோல்களுக்காக போராடிய வந்தன.

இதையடுத்து, தொடங்கிய ஆட்டத்தின் இரண்டாவது பாதியில், லிவர்பூல் அணியின் முகமது சாலா 85 வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து அணியை முன்னிலை பெற வழி செய்தார். இவரை தொடர்ந்து, ஆட்டத்தின் இறுதி நேரத்தில் டார்வின் நூனெஸ் லிவர்பூல் அணி சார்பாக கோல் ஒன்றை அடித்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனால், லிவர்பூல் அணி 2-0 என்ற கோல் கணக்கில் நபோலி அணியை வீழ்த்தியது. இதன் விளைவால், லிவர்பூல் அணி இதுவரை ஆடிய 6 போட்டிகளில் 5 ல் வெற்றி, 1ல் தோல்வி அடைந்து குரூப் A பிரிவில் 15 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here