உடுமலை சங்கர் ஆணவக்கொலை – கவுசல்யாவின் தந்தை விடுவிப்பு!!

0
Shankar & Kowsalya
Shankar & Kowsalya

உடுமலை சங்கர் ஆணவக்கொலை செய்யப்பட்ட வழக்கில் கவுசல்யாவின் தந்தை சின்னசாமிக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. மேலும் 5 பேருக்கு விதிக்கப்பட்டு இருந்த மரண தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு உள்ளது.

வழக்கின் பின்னணி:

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை சேர்ந்த சங்கர் என்பவர் கவுசல்யா என்கிற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் இரு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். 2016ம் ஆண்டு இருவர் மீதும் நடு ரோட்டில் வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் சங்கர் பலியானார். இந்த செய்தி சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

Kowsalya Father
Kowsalya Father

இந்த வழக்கை விசாரித்த திருப்பூர் மாவட்ட வன்கொடுமை தடுப்பு வழக்குகளுக்கு ஆன சிறப்பு நீதிமன்றம், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கவுசல்யாவின் தந்தை சின்னசாமி, பழநி எம்.மணிகண்டன், பி.செல்வக்குமார், தமிழ் என்ற கலை தமிழ்வாணன், மதன் என்ற மைக்கேல், ஜெகதீசன் ஆகிய 6 பேருக்கு தூக்கு தண்டனையும், தன்ராஜ் என்பவருக்கு ஆயுள் தண்டனையும், மணிகண்டன் என்பவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து உத்தரவு பிறப்பித்து இருந்தது.

அரசு குழந்தைகள் காப்பகத்தில் 57 சிறுமிகளுக்கு கொரோனா – 5 பேர் கர்ப்பமாக இருந்ததால் பரபரப்பு!!

Kowsalya 2nd Marriage
Kowsalya 2nd Marriage

இதனை எதிர்த்து தண்டனை பெற்றவரக்ள் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து இருந்தனர். இதில் வழக்கில் விடுதலை செய்யப்பட்ட கவுசல்யாவின் தாயார் அன்னலட்சுமி, அவரது உறவினர் பாண்டித்துரை, கல்லூரி மாணவன் பிரசன்னகுமார் ஆகியோருக்கும் தண்டனை வழங்குமாறு போலீசார் தரப்பில் கூறப்பட்டு இருந்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் கவுசல்யாவின் தந்தை சின்னசாமியை விடுதலை செய்தும், பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தும் உத்தரவிடப்பட்டு, போலீசார் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த உத்தரவிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாக காவல்துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here