உத்தரகாண்ட் மாநிலத்தில், மின் கட்டணம் இன்று முதல் 2.68 சதவீதம் உயர்த்தப்படுவதாக மாநிலத்தின் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
பாவாடை தாவணியில் சர்வ லக்ஷ்மணன் பொருந்த காட்சியளிக்கும் பாரதி கண்ணம்மா அஞ்சலி – ட்ரெண்டிங் புகைப்படம்!!
மின்கட்டணம் உயர்வு:
உத்தரகாண்ட் மாநிலத்தில் மின் கட்டணம் 2.68 சதவீதம் உயர்த்தப்படுவதாக, மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. வீட்டு பயன்பாட்டுக்கான மின் கட்டணம் 10 முதல் 30 பைசா வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக மின்சார ஒழுங்குமுறை ஆணையர் தெரிவித்துள்ளார். மாநிலத்தில் உள்ள, BPL மற்றும் snowbound நுகர்வோருக்கான மின் கட்டணம், வீட்டுக்கு 4 பைசா வீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

0 முதல் 100 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு 2.90 ரூபாயும், 101 முதல் 200 யூனிட் வரை 4.20 ரூபாய், 201 முதல் 400 வரை 5.80 ரூபாயும், 400 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவதற்கு 6.55 ரூபாய் வீதம் வீட்டு உபயோக மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. 100 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு, இந்த கட்டணம் அதிகரிக்கப்படவில்லை என்றும், இருந்தாலும், ஒரு யூனிட்டுக்கு 10 பைசா வீதம் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன், 2.80 ரூபாய், 4.00 ரூபாய், 5.50 ரூபாய் மற்றும் 6.25 ரூபாய் என இருந்த இந்த கட்டணங்கள் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளதால், அம்மாநில நுகர்வோர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்