Friday, April 19, 2024

“எனது அரசாங்கம் எதிர்கட்சிகளிடம் இல்லை” – தாக்கரே பதிலடி..!!

Must Read

சிவ சேனாவின் தலைவர் தாக்ரே எதிர்க்கட்சிகளின் கைகளில் தனது அரசாங்கம் இல்லை என்று நிருபர்களுக்கு பேட்டி ஒன்றை அளித்து உள்ளார்.

சிவ சேனா தலைவர்:

சிவ சேனா கட்சியின் தலைவர், உத்தவ் தாக்ரே இன்று தனது 60 வயதை அடைகிறார். இவரது ஆட்சி தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் நடக்கின்றது. இவரது ஆட்சியினை, எதிர்க்கட்சிகள் ” மூன்று சக்கர வாகனம்” போன்று உள்ளது என்று சித்தரித்தனர். அதற்கு தாக்கரே ஆவேசமாக பதில் ஒன்றை அளித்து உள்ளார். எதிர்க்கட்சிகள் சார்பில் மும்பை முதல் அகமதாபாத் வரை செயல்படுத்தவுள்ள புல்லட் ட்ரெயின் சேவை பற்றியும் கேள்விகளை எழுப்பி இருந்தனர். இவரது ஆட்சி சரியானதாக இல்லை என்றும் கூறியிருந்தனர்.

தாக்கரே பதில்:

இப்படியாக எதிர்க்கட்சிகள் இவரை மையப்படுத்தி பல கேள்விகளை எழுப்பி வந்த நிலையில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் ” எந்த கட்சியும் மஹாராஷ்டிராவில் ஆட்சியை ஏற்படுத்த முடியாது. எந்த தாமரையும் இங்கு மலராது. எனது ஆட்சியை ” மூன்று சக்கர வாகனம்” என்று இழித்து பேசியவர்களை பற்றி எனக்கு கவலை இல்லை, ஏனென்றால் சாமானிய மற்றும் வறுமையான மக்களின் போக்குவரத்து சாதனம் அது தான், அப்படி இருக்க நாங்கள் பெருமைபடுகிறோம். எங்களை பற்றி பேசுபவர்கள் முதலில் மத்தியில் என்ன ஆட்சி நடக்கிறது என்று கவனிக்க வேண்டும். நான் கடைசியாக பங்கேற்ற தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) கூட்டத்தில், ஆளும் கட்சி சார்பில் 30 முதல் 40 பேர் வரை பங்கேற்றனர், அப்படி என்றால் அது ” ரயில் சேவை அரசாங்கம்” தானே. அப்படி இருக்க அவர்கள் எப்படி எங்களை சித்தரிக்கலாம்.

சாத்தான்குளம் விவகாரம் – ஜெயராஜ் மகளுக்கு அரசு வேலை வழங்கிய முதல்வர்..!

udhav thackrey reply to his opposition parties
udhav thackrey reply to his opposition parties

அவர் மேலும் கூறுகையில் ” நான் சீனா எல்லைப்பிரச்சனையை ஏற்படுத்திய போது பிரதமர் மோடி அவர்களிடம் சீன நிறுவனங்கள் குறித்து சரியாக முடிவெடுக்க சொல்லி வலியுறுத்தினேன். நாங்கள், அதனால் தான் அவர்களுக்கும் நமக்கும் ஆன ஒப்பந்தங்களை நிலுவையில் வைத்து உள்ளோம். மேலும், இந்த மும்பை புல்லட் ரயில் சேவையை பொறுத்தவரையில் மக்களின் முடிவே இறுதியானது. மக்கள் வேண்டாம் என்று முடிவு செய்தால் எங்கள் அரசு அதனை செயல்படுத்தாது” இப்படியாக தெரிவித்து உள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -