கல்லூரித் தேர்வுகளை நடத்த கட்டாயப்படுத்தும் யுஜிசி – எச்சரிக்கை விடுத்த மஹாராஷ்டிரா அமைச்சர்!!

0

மகாராஷ்டிராவில் பல்கலைக் கழக தேர்வுகளை ரத்து செய்து மாநில முதல்வர் உத்தவ் தாக்ரே உத்தரவிட்டுள்ளார். மேலும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் பல்கலைக்கழக மானியக்குழு யு.ஜி.சி., இறுதியாண்டு மாணவர்களுக்கு தேர்வு நடத்த இருப்பதாக தெரிவித்துள்ளது.

அரசு உத்தரவை மீறி தேர்வு..!

இது தொடர்பாக மகாராஷ்டிர மாநில உயர் மற்றும் தொழில்நுட்ப கல்வித்துறை அமைச்சர் உதய் சமந்த் கூறியதாவது, மகாராஷ்டிராவில் உள்ள பல்கலைக் கழகங்களில் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல் மிக அதிகளவு இருப்பதால் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மற்றும் குழு உறுப்பினர்களிடம் கலந்து ஆலோசித்து இம்முடிவை முதல்வர் வெளியிட்டுள்ளார்.

ஆனால் தேர்வை நடத்த யுஜிசி புதிய வழிக்காட்டுதல்களை வெளியிட இருப்பதாக தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் அதிகளவு இருப்பதால் இத்தேர்வை நடத்தக்கூடாது என்பதில் மாநில அரசு உறுதியாக இருக்கிறது. இறுதியாண்டு முடிக்கும் மாணவர்களுக்கு பட்ட சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கும்படி துணை வேந்தர்கள் ஏற்கனவே கடிதம் அளித்துள்ளனர்.

துணை வேந்தர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும்..!

இந்நிலையில் தற்போது யுஜிசியின் நடவடிக்கை சரியானதல்ல ஒருவேளை தேர்வை யுஜிசி நடத்தினால் கொரோனா நோய் தொற்றுக்கு மாணவர்கள் உள்ளாவார்கள். 9 லட்சம் மாணவர்களை எப்படி தங்க வைத்து அவர்களை பரிசோதித்து தேர்வுக்கு அனுப்புவீர்கள் அவர்களுக்கு தேவையான நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள பல்கலைக்கழக நிர்வாகம் பொறுப்பு ஏற்குமா என கேள்வி எழுப்பியுள்ளனர்.

இன்று தலைமைச் செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் – பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை..!

மாநில அரசின் உத்தரவை மீறி தேர்வு நடத்தப்படும் பட்சத்தில் எந்த மாணவருக்காவது தொற்று வந்தால் துணை வேந்தர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்து வழக்கு நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடக் கூடாது. இப்பிரச்னையை அந்தந்த மாநில அரசின் முடிவுக்கே விட்டுவிட வேண்டும் என இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here