அட்ராசக்க..வாட்ஸ் அப்பில் வந்துள்ள புது அம்சம்- இனி டென்ஷன் இல்லாமல் ஈஸியா Taxi Book செய்யலாம்!

0
அட்ராசக்க..வாட்ஸ் அப்பில் வந்துள்ள புது அம்சம்- இனி டென்ஷன் இல்லாமல் ஈஸியா Taxi Book செய்யலாம்!

நாம் குறிப்பிட்ட இடத்திற்கு விரைவில் செல்வதற்காக Uber நிறுவனம் WhatsApp மூலம் டாக்ஸி முன்பதிவு செய்யும் அம்சத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

Uber டாக்சி:

நாம் செல்ல இருக்கும் குறிப்பிட்ட இடத்திற்கு விரைவாக செல்வதற்கு ஏராளமானோர் டாக்சி வசதியை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இதன் அடுத்த கட்டமாக மக்கள் அதிகம் பயன்படுத்தும் வாட்ஸ் அப் செயலி மூலம் டாக்சி முன்பதிவு செய்யும் அம்சத்தை Uber நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த வருடம் லக்னோவில் இந்த சேவை ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து வெற்றிகரமாக செயல்ப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டம் தற்போது National capital region என்று சொல்லப்படும் டெல்லி-என்சிஆர் பகுதியில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த சேவையை பெற, முதலில் +917292000002 என்ற எண்ணிற்கு நேரடியாக வாட்ஸ் அப்பில் மெசேஜ் செய்யவும். அதன் பிறகு அதில் தோன்றும் QR கோடை ஸ்கேன் செய்து, பிக் அப் மற்றும் ட்ராப் பகுதிகளை தேர்ந்தெடுத்து முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாட்சப் மூலம் புக் செய்பவர்களின் பாதுகாப்பிற்காக ஓட்டுனர்களின் முழு விவரமும் அறிந்து கொள்ளலாம். கூடிய விரைவில் நாடு முழுவதும் இந்த சேவை விரிவுபடுத்தப்படும் என்று Uber நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here