இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு விசா வருகை தற்காலிக நிறுத்தம் – ஐக்கிய அரபு அமீரகம் உத்தரவு!!

0

கொரோனா பரவல் காரணமாக தற்போது ஐக்கிய அரபு அமீரகம் இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கான விசாவை நிறுத்தி வைத்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம்

கொரோனா பரவல் தற்போது அனைத்து நாடுகளிலும் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்ததால் அந்த தாக்கத்தில் இருந்து மீள கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகம் புதிய செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதாவது ஐக்கிய அரபு அமீரகம் செல்லும் பயணிகள் கடந்த 14 நாட்கள் இந்தியாவில் தங்கி இருந்தால் அவர்களுக்கு தற்காலிகமாக விசா நிறுத்தி வைக்கப்படும் என்று அறிவித்துள்ளனர். இதனை அந்நாட்டு விமான நிறுவனமான எத்திஹாட் ஏர்வேஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

விமானம் புறப்பட்ட சில வினாடியில் ஒடுபாதையில் குதித்த பயணி - விமான நிலையத்தில் ஏற்பட்ட பரபரப்பு!!!

அதில் அவர்கள் பயணிகளுக்கு கூறியதாவது 14 நாட்களுக்குள் இந்தியாவில் தங்கி இருந்தால் கண்டிப்பாக அவர்களுக்கு விசா தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று கூறியுள்ளனர். மேலும் இது இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான், நேபாளம், ஆப்கானிஸ்தான், நைஜீரியா, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கும் பொருந்தும் என்று கூறியுள்ளனர். கொரோனா பரவல் தாக்குதலை தடுக்கவே இந்த நடவடிக்கை என்றும் கூறியுள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here