யு20 மகளிா் கால்பந்து 2022 – சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின்!

0
யு20 மகளிா் கால்பந்து 2022 - சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின்!
யு20 மகளிா் கால்பந்து 2022 - சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின்!

ஜப்பான் மற்றும் ஸ்பெயின் அணிகளுக்கு இடையிலான யு20 மகளிா் கால்பந்து தொடரில், சிறப்பாக விளையாடிய ஸ்பெயின் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

வீராங்கனைகளின் அசத்தல் வெற்றி!

கோஸ்டா ரிகாவில் நடைபெற்ற 20 வயதுக்கு உள்பட்ட மகளிருக்கான (யு20) ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி அரங்கேறி வந்தது. இந்த தொடருக்கான அனைத்து போட்டிகளும் முடிவடைந்த நிலையில் நேற்று இறுதி போட்டி நடைபெற்றது. இந்த இறுதி ஆட்டத்தில் ஜப்பான் மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதியது. மேலும் இதற்கு முன்னர் இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் கடந்த 2018 ஆம் நடைபெற்றது. அந்த ஆட்டத்தில் ஜப்பான் அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த தோல்வியை சரிக்கட்ட ஸ்பெயின் அணி போட்டியின் தொடக்கத்தில் இருந்தே கடுமையாக போராடியது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதன் படி விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஸ்பெயின் அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி வெற்றியை கைப்பற்றியது. இதன் மூலம், கடந்த 2018 உலகக் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஜப்பானிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்துள்ளது. இந்த ஆட்டத்தில் ஸ்பெயினுக்காக இன்மா கப்பாரோ (12’), சல்மா செலஸ்டே (22’, 27’) ஆகியோரும், ஜப்பானுக்காக சுஸு அமானோவும் (47’) கோல் அடித்து வெற்றிக்கு உதவியாக இருந்தனர். மேலும் நடப்பு உலகக் கோப்பை போட்டியில் தொடா்ந்து 9 ஆட்டங்களில் தோல்வி காணாத ஜப்பானுக்கு, ஸ்பெயின் தோல்வியை பரிசளித்திருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here