U19 வேர்ல்ட் கப்: அரையிறுதியை எதிர்நோக்கி இந்தியா…, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இன்று பலப்பரீட்சை!!

0
U19 வேர்ல்ட் கப்: அரையிறுதியை எதிர்நோக்கி இந்தியா..., ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இன்று பலப்பரீட்சை!!
U19 வேர்ல்ட் கப்: அரையிறுதியை எதிர்நோக்கி இந்தியா..., ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இன்று பலப்பரீட்சை!!

U19 டி20 உலக கோப்பை தொடரில் இந்திய மகளிர் அணி, ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இன்று மோத உள்ளது.

U19 வேர்ல்ட் கப்:

தென் ஆப்பிரிக்காவில் 19 வயதுக்கு உட்பட்ட மகளிருக்கான டி20 உலக கோப்பை தொடரின் முதல் சீசன் நடைபெற்று வருகிறது. 16 அணிகளுக்கு இடையே, நடத்தப்படும் இந்த தொடரில், இந்திய மகளிர் அணி, குரூப் D யில், தென் ஆப்பிரிக்கா, ஸ்காட்லாந்து மற்றும் UAE அணிகளுடன் இணைந்துள்ளது. இந்த தொடரில், இதுவரை லீக் சுற்றுகள் முடிந்த நிலையில், தற்போது சூப்பர் 12 சுற்றுகள் நடைபெற்று வருகின்றன.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதில், இந்திய மகளிர் அணியானது, லீக் சுற்றில், தென் ஆப்பிரிக்கா, ஸ்காட்லாந்து மற்றும் UAE அணிகளை வீழ்த்தி 6 புள்ளிகளுடன் முதல் அணியாக சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறியது. இந்த சூப்பர் 12 சுற்றில், இந்திய அணி இன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும், நாளை இலங்கை அணிக்கு எதிராகவும் மோத உள்ளது.

ODI ல் அதிக ரன்கள் எடுத்த வீரர்களில் இந்தியரே முதலிடம்…, டாப் 3 பட்டியல் இதோ!!

இந்த இரு போட்டிகளில் இந்திய அணி வென்றால், நேரடியாக அரையிறுதிக்கு தகுதி பெரும். அரையிறுதி போட்டிகள், ஜனவரி 27ம் தேதியும், இறுதிப் போட்டிகள் ஜனவரி 29ம் தேதியும் நடைபெற இருக்கிறது. இதனை தொடர்ந்து, சர்வதேச மகளிர் அணிக்கான டி20 உலக கோப்பை தொடர் பிப்ரவரி மாதம் 10ம் தேதி முதல் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here