தமிழகத்தில் பரவும் டைபாய்டு காய்ச்சல்…, தற்காத்து கொள்ள என்ன செய்ய வேண்டும்?? டாக்டர் கூறிய அட்வைஸ்!!

0
தமிழகத்தில் பரவும் டைபாய்டு காய்ச்சல்..., தற்காத்து கொள்ள என்ன செய்ய வேண்டும்?? டாக்டர் கூறிய அட்வைஸ்!!
தமிழகத்தில் பரவும் டைபாய்டு காய்ச்சல்..., தற்காத்து கொள்ள என்ன செய்ய வேண்டும்?? டாக்டர் கூறிய அட்வைஸ்!!

தென்னிந்தியாவில் நிலவி வரும் பருவ நிலை மாற்றம் காரணமாக பல்வேறு வகையான நோய் தொற்றுகள் அதிகரிக்கும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். அதாவது, ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான மாதங்களில் கோடை காலம் முடிந்து மழைக்காலம் தொடங்கும். இத்தகைய பருவ நிலை மாற்றத்தாலும், மழையால் அங்கங்கே தேங்கும் நீரில் கொசுக்கள் நிலை கொண்டு இருப்பதாலும், உடல் சூடு (காய்ச்சல்) அதிகரித்து வயிற்றுப்போக்கு ஏற்படும். இதன் விளைவால், பாக்டீரியா தொற்றுகள் குழந்தைகளிடம் அதிக அளவில் பரவி டெங்கு, சிக்குன் குனியா, வைரல் காய்ச்சல், டைபாய்டு காய்ச்சல் வரும் என காஞ்சி காமகோடி குழந்தைகள் நல மருத்துவமனை டாக்டர் பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

ஐயோ ஐயோ.., கண்டதை கடற்கரையில இப்படி காட்டறீங்களே அமலா.., பிரஷரில் துடித்த இளவட்டங்கள்!!

இதிலிருந்து பொது மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள, சுத்திகரிப்பு செய்யாத குடிநீர் அருந்துவதை தவிர்த்தல், வெளியில் சாப்பிடும் உணவுகளை சூடாக உட்கொள்ளுதல், பழைய உணவுகளை தவிர்த்தல், தெருவோரங்களில் சுகாதாரமற்ற நிலையில் விற்கும் உணவு, குளிர்பானங்கள் போன்றவற்றை உட்கொள்வதை தவிர்த்தல் வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார். மேலும், தொடர் வயிற்றுப்போக்கு, கடும் ஜுரம் இருந்தால் உடனே மருத்துவரை சந்திக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இத்துடன், 104 டிகிரி வரை காய்ச்சல், தலைவலி, உடல் வலி, வயிற்று வலி, தொடர்ந்து வயிற்றுப்போக்கு உள்ளிட்டவை டைபாய்டு காய்ச்சலுக்கான அறிகுறிகள் என தெளிவுப்படுத்தி உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here