வாட்ஸ் ஆப் உலக மக்கள் அதிகமாக பயன்படுத்தும் ஒரே செயலியாக உள்ளது. இதை பயன்படுத்துபவர்களின் தகவல்கள் பாதுகாப்பிற்காக டூ ஸ்டெப் வெரிஃபிகேஷன் என்ற புதிய அப்டேட்டை அறிமுகப்படுத்தியுள்ளது வாட்ஸ் ஆப் நிறுவனம்.
வாட்ஸ் ஆப் அப்டேட்
காலை எழுந்தது முதல் இரவு உறங்கும் வரை அன்றாட செயல்களில் முக்கியமான ஒன்றாகிவிட்டது வாட்ஸ் ஆப் செயலி. நிற்க நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் இந்த காலத்தில் சாப்பிட கூட மறந்து விடுகிறோமோ என்னவோ இந்த வாட்ஸ் ஆப்பை ஒருபோதும் மறப்பதில்லை. சிறியவர் துவங்கி பெரியவர் வரை வாட்ஸ் ஆப் தவிர்க்க முடியாத செயலியாக மாறிவிட்டது. இந்த வாட்ஸ் ஆப் பயன்படுத்துபவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக ஒவ்வொருவரின் வாட்ஸ் ஆப் கணக்கிலிருந்து தகவல்கள் திருடப்படுவதாக கண்டுபிடிக்கபட்டுள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அதிக பயனாளர்களை கொண்ட வாட்ஸ் ஆப் நிறுவனம் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் விதமாக வாட்ஸ் ஆப் டூ ஸ்டெப் வெரிஃபிகேஷன் என்ற புதிய அப்டேட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி மக்கள் தங்கள் தகவல்களை வாட்ஸ் ஆப் செயலியில் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த புதிய டூ ஸ்டெப் வெரிஃபிகேஷனை பயன்படுத்துவதற்கு முதலில் வாட்ஸ் ஆப் செயலியில் settings ஆப்சனுக்கு செல்ல வேண்டும். அதில் two step verification என்ற ஆப்ஷனை அழுத்த வேண்டும்.
அதில் 6 இலக்க எண்ணை பதிவு செய்ய சொல்லி கேட்கப்படும். அவ்வாறு செய்தால் வாட்ஸ் ஆப் அப்டேட் ஆகும். பிறகு வெரிஃபிகேஷனுக்காக மெயில் id கேட்கப்படும். அதை கொடுத்தால் மட்டுமே இந்த டூ ஸ்டெப் வெரிஃபிகேஷன் ஆப்சன் ஏற்றுக்கொள்ளப்படும். இது பாதுகாப்பானது. தொடர்ந்து டூ ஸ்டெப் வெரிஃபிகேஷன் ஆப்சனில் change pin என்ற ஆப்சனும் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த ஆப்ஷனில் தேவையானபோது pin நம்பரை மாற்றிக்கொள்ளலாம். இவ்வாறு செய்தால் உங்கள் வாட்ஸ் ஆப் செயலி பாதுகாப்பானதாக இருக்கும்.