உத்திரப் பிரதேசத்தில் இரண்டு கே.ஜி.எப்..! 3,350 டன் தங்கம் இருக்காம்..!

0

உத்திரபிரதேசத்தின் இரண்டு இடங்களில் மிகப்பெரிய தங்க சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. இவற்றில் இருக்கும் தங்கத்தின் அளவு இந்திய அரசாங்கத்தின் கையிருப்பில் உள்ள தங்கத்தின் அளவை விட அதிகம் என கூறப்படுகிறது.

அந்த 2 இடங்கள்..!

உத்தரப்பிரதேச சுரங்கத்துறை இயக்குநரக அதிகாரி கே.கே.ராய் இந்த சுரங்கங்கள் கண்டுபிடிப்பு குறித்து கூறும் போது, அரசின் 20 ஆண்டுகால சந்தேகத்தைத் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் சோன்பத்ரா மற்றும் ஹர்தி ஆகிய இரு இடங்களில் தங்க சுரங்கங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவற்றில் சோன்பத்ராவில் 2,700 டன் தங்கமும், ஹர்தியில் 650 டன் தங்கம் என மொத்தம் 3,350 டன் தங்கம் உள்ளது என கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இது இந்திய நாட்டின் கையிருப்பில் உள்ள தங்கத்தின் அளவை விட அதிகமாம்.

ஆன்லைன் ஏலம்..!

இந்த சுரங்கங்களை ஆன்லைனில் ஏலத்தில் விட அரசு 7 பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்து உள்ளது. அங்கு தங்கம் மட்டுமில்லாமல் யுரேனியம் போன்ற அறிய தாதுக்களும் உள்ளன என கூறப்படுகிறது.

எந்தெந்த நாட்டில் எவ்வளவு..?

உலகில் உள்ள நாடுகளில் கையிருப்பில் உள்ள தங்கத்தின் அளவை உலகத் தங்க கூட்டமைப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி உலக நாடுகளில் உள்ள தங்கம் கையிருப்பின் விபரம்:

  1. அமெரிக்கா – 8,133.5 டன் தங்கம்
  2. ஜெர்மனி – 3,366 டன் தங்கம்
  3. இத்தாலி – 2,451.8 டன் தங்கம்
  4. பிரான்ஸ் – 2436 டன் தங்கம்

இந்தியாவிடம் 626 டன் தங்கம் கையிருப்பில் உள்ளது. இது உலக மதிப்பில் 6.6 சதவீதமாகும்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here