இரு குழந்தைகள் திட்டம் – இந்தியாவில் செயல்படுத்தப்படுமா??

0
இரு குழந்தைகள் திட்டம் - இந்தியாவில் செயல்படுத்தப்படுமா

இந்தியாவில் மக்கள்தொகைப் பெருக்கம் என்பது ஒரு தீர்வு காண முடியாத பிரச்சனையாக உள்ளது. இதனை கட்டுப்படுத்த ‘இரு குழந்தைகள் திட்டம்’ அதாவது ஒரு தம்பதியினர் இரு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்ளக் கூடாது இந்தியாவில் அமல்படுத்துவது தொடர்பான பொதுநல வழக்கு ஒன்று உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளது.

மக்கள்தொகை கட்டுப்பாடு

ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் தூய்மையான குடிநீர், காற்று, அமைதி, கல்வி, இருப்பிடம், கல்வி மற்றும் அடிப்படை வசதிகள் முறையாக சென்றடைய வேண்டும் என இத்திட்டம் தொடர்பாக வழக்கு தொடர்ந்த பாஜக டெல்லி தலைவர் சுனில் உபாத்யாய் தனது மனுவில் தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவில் மக்கள்தொகையை கட்டுப்படுத்த ‘இரு குழந்தைகள் திட்டம்’ உடனடியாக அமல்படுத்தப்படவேண்டும் எனவும் கூறியுள்ளார். இது குறித்து அரசியல் சட்டப்பிரிவு 21இல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வழக்கு தொடர்பாக அரசு 4 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

முதலிடத்தில் கேரளா

உலகின் மக்கள்தொகை வேகமாக நகர்ந்து வரும் நகரங்களின் பட்டியலை ஐநா சபை தனது “தி எகனாமிஸ்ட்” அறிக்கையில் வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவில் கேரளவைச் சேர்ந்த மலப்புரம் முதலிடத்தில் உள்ளது. மேலும் இந்தியாவைச் சேர்ந்த பல நகரங்களும் இதில் உள்ளன. தமிழகத்தில் திருப்பூர் நகரம் மட்டும் இதில் இடம்பிடித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here