எங்க இங்க இருந்த காஷ்மீர், லடாக்க காணோம்.. இந்த ட்விட்டருக்கு என்ன தான் ஆச்சு??

0
சமூக வலைத்தளமான ட்விட்டரில் இந்தியாவின்  ஜம்மு காஷ்மீர், லடாக் பகுதிகளை வேறு நாடாக காட்டப்பட்டுள்ளது. இதற்கு இணையவாசிகள் கடும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
மத்திய அரசு ஏற்கனவே சமூக வலைத்தளங்களுக்கும், ஓடிடி தளங்களுக்கும் புதிய ஐடி விதிகளை கொண்டு வந்தது. இதற்கு வாட்ஸ் அப், பேஸ்புக், கூகிள் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த புதிய ஐடி விதிகளை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தன. அப்போதிலிருந்தே ட்விட்டர் நிறுவனம் மத்திய அரசிடம் ஒரு மோதல் போக்கை கையாண்டு வருகிறது.
 
தற்போது மீண்டும் ஒரு சர்ச்சைக்குரிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதாவது ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களை தன்னுடைய மேப்பில் தனி நாடாக காட்டியுள்ளது ட்விட்டர். இதற்கு இணையவாசிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். ஏற்கனவே காஷ்மீர், லடாக் பகுதிகளால் பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் இந்தியாவுக்கு மோதல் நிலவி வருகிறது. இந்நிலையில் ட்விட்டர் மேப்பில் இப்பகுதிகள் இந்தியாவிலிருந்து பிரித்து காட்டப்பட்டுள்ளன.
ஏற்கனவே கடந்த ஆண்டு அக்டோபரில் யூனியன் பிரதேசமான லடாக்கை சீனாவின் பகுதியாக ட்விட்டர் மேப் காட்டியது. பின்னர் ட்விட்டர் தனது தவறை திருத்திக் கொண்டதான் அடிப்படையில் அப்பிரச்சனை முடிவுக்கு வந்தது. தற்போது மீண்டும் அதே போன்று ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here