ஃப்ளீட்ஸ் வசதியை நிறுத்த முடிவு…!ட்விட்டர் நிறுவனம் அதிரடி அறிவிப்பு!!!

0

தற்போது உள்ள சூழலில் கருத்தைகளை பரிமாறிக்கொள்ள மற்றும் பல முக்கிய தகவல்கள் அறிய உதவுவது சமூக வலைத்தளங்கள் தான். அதிலும் ட்விட்டர் பங்கு மிக முக்கியமான ஒன்று. அந்த வகையில் ட்விட்டர் நிறுவனம் ஒரு அதிரடி அறிவிப்பை அறிவித்துள்ளது. அதாவது ட்விட்டரின் ஃப்ளீட்ஸ் வசதியை நிறுத்தப்போவதாக அந்த நிறுவனம் தெரிவித்து உள்ளது.

சமூக வலைத்தளங்கள் மக்களுக்கு பல்வேறு வகையில் உதவுகின்றன. அதாவது நாட்டு நடப்புகளை அறிய, உலக முழுவதும்  நடைபெறும் பிரச்சனைகள் தெரிந்த கொள்ள என அனைத்து வகையிலும் உதவுகிறது. இன்னும் சொல்ல வேண்டும் என்றால் தங்களின் கருத்துகளை துணிந்து முன்வைக்க இந்த சோசியல் மீடியாக்கள் துணை நிற்கின்றனர். அந்த சமூக வலைத்தளங்களில் ஒன்று தான் ட்விட்டர் தளம். இந்த ஒவ்வொரு தளங்களும் தங்களின் பயனர்களை ஈர்க்க ஏதாவது புது வசதிகளை அவ்வப்போது அறிமுகப்படுத்தி வருகிறது.

அதில் சிலவற்றிற்கு பயனர்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைக்கிறது. மேலும் ஒரு சிலவற்றுக்கு அந்த அளவிற்கு கிடைப்பதில்லை. அந்த வகையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு ட்விட்டர் நிறுவனம் அறிவித்த அதன் புது பயன்பாடான ஃப்ளீட்ஸ் வசதியை வருகிற ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் நிறுத்த முடிவு செய்து உள்ளது. அதாவது ஃப்ளீட்ஸ் வசதி என்பது வாட்சப், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில்  ஸ்டோரி வைக்கப்படுவது போன்றது. மேலும் பயனாளிகளின் குறைவான பயன்பாடு காரணமாக இந்த வசதியை நிறுத்த ட்விட்டர் நிறுவனம் முடிவு செய்து உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here