
உலகின் பல மக்கள் பயன்படுத்தும், ட்விட்டர் சமூக வலைதளத்தில் அதிரடி அப்டேட் ஒன்றை எலான் மஸ்க் நிர்வாகம் பயனர்களுக்கு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பயனர்களுக்கு குட் நியூஸ் :
ட்விட்டர் நிறுவனத்தின் பங்குகளை, உலகின் முன்னாடி பணக்காரரான எலான் மஸ்க் அண்மையில் கையகப்படுத்தினார். இந்த நிறுவனம் இவர் கைக்கு வந்ததிலிருந்து, பல முன்னணி நடவடிக்கைகளை இவர் எடுத்து வருகிறார். அடுத்த தங்கள் நிறுவனத்தில் என்ன நடக்குமோ? என்ற கவலையில் நாள்தோறும் ஊழியர்கள் இருந்து வருகின்றனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்த நிலையில், பயனர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக ட்விட்டர் தளத்தில் எலான் மஸ்க் நிர்வாகம், அதிரடி மாற்றம் ஒன்றை செய்ய இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அதாவது இதற்கு முன் நாம் ட்வீட் போடும் போது, அதில் ஏதாவது தவறு ஏற்பட்டால் அதனை டெலிட் மட்டும்தான் செய்ய முடியும். அதில் திருத்தங்களை மேற்கொள்ள முடியாது.
தமிழக விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு – அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட அதிரடி தகவல்!!
இந்த வாய்ப்பு ப்ளூ டிக் எனப்படும் அதிகாரப்பூர்வ கணக்கு வைத்திருப்போருக்கு மட்டும்தான் கிடைக்கும். தற்போது இந்த வாய்ப்பை அனைத்து பயனர்களுக்கும் வழங்க, ஆலோசனை நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்த அறிவிப்பு மட்டும் அமலானால், ட்விட்டர் கணக்கு வைத்திருக்கும் அனைத்து பயனர்களும் நிச்சயம் பயனடைவார்கள் என்பதில் மாற்றம் இல்லை.