ட்விட்டர் பயனர்களே ரெடி ஆகுங்க .,ப்ளூ டிக் கணக்கிற்கு கட்டண வசூல் தேதி வெளியீடு! எலான் மஸ்க் உறுதி!!

0
ட்விட்டர் பயனர்களே ரெடி ஆகுங்க .,ப்ளூ டிக் கணக்கிற்கு கட்டண வசூல் தேதி வெளியீடு! எலான் மஸ்க் உறுதி!!
ட்விட்டர் பயனர்களே ரெடி ஆகுங்க .,ப்ளூ டிக் கணக்கிற்கு கட்டண வசூல் தேதி வெளியீடு! எலான் மஸ்க் உறுதி!!

ட்விட்டர் நிறுவனத்தின் பங்குகளை, அண்மையில் வாங்கிய எலான் மஸ்க், தற்போது ப்ளூ டிக் கணக்கு வைத்திருப்பவரிடம், கட்டண வசூல் எப்போது தொடங்கும் என்ற தேதியை அறிவித்துள்ளார்.

கட்டணம் வசூல்:

உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க், நீண்ட இழுபறிக்கு பின் கடைசி நேரத்தில் ட்விட்டர் நிறுவனத்தின் பங்குகளை 3.62 கோடி கொடுத்து கையகப்படுத்தினார். இவர் கைக்கு அதிகாரம் மாறியதும், பல அதிரடி நடவடிக்கைகளை இவர் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். குறிப்பாகச் சொல்லப்போனால் நிறுவனத்தின் சிஇஓ உள்ளிட்ட, பல அதிகாரிகளை வீட்டுக்கு அனுப்பினார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதையெல்லாம் தாண்டி, பயனர்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக ட்விட்டரில் பயனர் போடும் பதிவை எடிட் செய்து கொள்ளலாம் என்ற வசதியை அனைவருக்கும் வழங்க, ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவித்தார். இதற்கு முன் ப்ளூடிக் கணக்கு வைத்திருப்போருக்கு மட்டுமே இந்த, வாய்ப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் இந்த துறை சார்ந்த பதவிக்கு இனி சிறப்பு பொதுத்தேர்வு கட்டாயம் – அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

இந்த நிலையில், ட்விட்டரில் ப்ளூ டிக் எனப்படும் அதிகாரப்பூர்வ கணக்கு வைத்திருப்போர் இடம் இனி மாதம் 8 டாலர் வசூலிக்கப்படும் என அண்மையில் அறிவித்தார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, இதுவரை வெளியாகாமல் இருந்தது. தற்போது, பல கட்ட யோசனைகளுக்கு பின், அடுத்த வாரம் ப்ளூடிக் சந்தாதாரர்களிடம் கட்டணம் வசூலிக்க உள்ளதாக, மஸ்க் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இவரின் இந்த திடீர் அறிவிப்பு, ட்விட்டர் சந்தாதாரர் களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here