இனி ட்விட்டருக்கு தடை.. அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!!!

0

சமூக வலைத்தளமான ட்விட்டருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக நைஜீரியா அரசு தெரிவித்துள்ளது. நைஜீரிய அதிபர் முகமது புஹாரி போட்ட ட்விட்டர் பதிவை ட்விட்டர் நிறுவனம் நீக்கியதை தொடர்ந்து ட்விட்டருக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அந்நாட்டு அதிபர் முகமது புஹாரி, நைஜீரியாவில் உள்ள பிராந்திய பிரிவினைவாதிகளுக்கு தண்டனை வழங்கப்படும் என  ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இந்த பதிவு ட்விட்டரில் இருந்து நீக்கப்பட்டது. இந்நிலையில், ட்விட்டருக்கு நைஜீரிய அரசு காலவரையின்றி தடை விதித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

நைஜீரிய தகவல் துறை அமைச்சகம் ட்விட்டருக்கு தடை விதிக்கப்படுவதாக ட்விட்டரிலேயே பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தது. அரசின் உத்தரவுக்கு பிறகு அந்நாட்டில் பல பகுதிகளில் ட்விட்டர் தளத்தை பயன்படுத்த முடியவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. நைஜீரிய அரசின் தடை வருத்தமளிப்பதாகவும், இதுசம்மந்தப்பட்ட விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் ட்விட்டர் தெரிவித்துள்ளது.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here