விவாகரத்துக்கு விஷயத்தில் ட்விஸ்ட் வைத்த தனுஷ், ஐஸ்வர்யா – அப்போ சேர வாய்ப்பிருக்கு போலையே!!

0

கடந்த சில தினங்களாக இணையத்தில் மிகவும் வைரலாக பரவி வரும் சர்ச்சையாக இருப்பது நடிகர் தனுஷ் மற்றும் அவரது மனைவியின் விவாகரத்து செய்தி. தற்போது இது தொடர்பான மேலும் ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தனுஷ் விவாகரத்து:

துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் தனுஷ். அதை தொடர்ந்து அடுத்தடுத்து வெற்றி படங்களில் நடித்து தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வெற்றி நடை போட்டு கொண்டு இருக்கிறார். மேலும் 2004 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

 

அவர்களுக்கு திருமணமாகி 18 வருடங்களான நிலையில் இருவரும் பிரிய இருப்பதாக ஜனவரி 17ம் தேதி சமூக வலைதளங்களில் அறிவித்து இருந்தனர். அதை பார்த்த அவர்களது ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் அனைவரும் அவர்களுக்கு சேர்ந்து வாழுமாறு அறிவுரை கூறி வந்தனர்.

இந்த நிலையில் இருவரும் புதிதாக ஒரு ட்விஸ்ட் ஒன்றை வைத்து உள்ளனர். அது என்னவென்றால் முறைப்படி விவாகரத்து கோரி நீதிமன்றத்திற்கு செல்ல போவது இல்லை என்று கூறிவிட்டார்களாம். மேலும் பொதுவாக விவாகரத்து செய்தால் சமூக வலைத்தளங்களில் தங்கள் பெயரின் பின்னால் இருக்கும் தன் கணவரின் பெயரை எடுத்து விடுவார்கள். ஆனால் ஐஸ்வர்யா தனுஷ் தற்போது வரை தனுஷின் பெயரை எடுக்க வில்லை. அதனால் அவர்கள் மீண்டும் சேர வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here