கோபியிடன் கல்யாணம் நடக்குமா? பீதியில் ராதிகா..’பாக்கியலட்சுமி’ சீரியலில் வரப்போகும் ட்விஸ்ட்!!

0
கோபியிடன் கல்யாணம் நடக்குமா? பீதியில் ராதிகா..'பாக்கியலட்சுமி' சீரியலில் வரப்போகும் ட்விஸ்ட்!!
கோபியிடன் கல்யாணம் நடக்குமா? பீதியில் ராதிகா..'பாக்கியலட்சுமி' சீரியலில் வரப்போகும் ட்விஸ்ட்!!

பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருப்பது ராதிகா – கோபியின் திருமண எபிசோடுக்காக தான். இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்புகளுடன் சீரியல் நகர்ந்து வருகிறது.

பாக்கியலட்சுமி:

கோபி, ராதிகாவை கல்யாண செய்வதில் மிகவும் உறுதியாக உள்ளார். மேலும் கல்யாண ஏற்பாடுகளும் தடபுடலாக நடந்து வருகிறது. இவர்களின் கல்யாணத்துக்கு சமைக்க போவது பாக்கியா தான்.ஏனென்றால் குடும்ப பொறுப்பு முழுவதும் தற்போது பாக்கியாவின் கையில் தான் உள்ளது, அதனால் பாக்கியா கல்யாண சமையல் ஆர்டர்களை எடுக்க முடிவு எடுக்கிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அவருக்கு வரும் முதல் ஆர்டரே கணவர் கோபியின் கல்யாண ஆர்டர் தான். மேலும் கோபி தனது திருமணம் குறித்து அம்மா ஈஸ்வரியிடம் சொல்கிறார். ஆனால் அவர் கோபியை திட்டி தீர்த்து விட்டு சென்று விட்டார். இதையடுத்து அம்மா ஈஸ்வரி, தனது கணவர் ராமமூர்த்தியிடம் கோபி-ராதிகா கல்யாணம் பற்றி சொல்ல அவர் அதிக கோபத்துடன் கோபியை பார்க்க செல்கிறார். அப்போது, ராமமூர்த்தி, கோபியிடம் கல்யாணத்தை நிறுத்து, இது தவறான முடிவு என கூறுகிறார்.

விஜய் சேதுபதியை நம்பி தலையில் துண்டை போட்ட தயாரிப்பாளர்.., கோடிக்கணக்கில் நஷ்டமான துயரம்!!

ஆனால் கோபி எதையும் காதில் வாங்குவதாக இல்லை, தன் முடிவில் உறுதியாக இருக்கிறார். மற்றொரு பக்கம் ராதிகா இந்த கல்யாணம் நல்ல படியாக நடக்குமா? நடக்காதா என்று பெரும் பீதியில் உள்ளார். இன்னொரு பக்கம் தனது கணவர் திருமணம் என்று தெரியாமல், கல்யாணத்திற்கு சமைக்க மிகுந்த ஆர்வமாக மண்டபத்திற்கு கிளம்பியுள்ளார் பாக்கியா . இதையடுத்து என்ன நடக்கும் கோபி-ராதிகா திருமணம் நடக்குமா? இல்லை ராமமூர்த்தி திருமணத்தை நிறுத்தி விடுவாரா? வரும் எபிசோடுகளில் பெரிய ட்விஸ்டை எதிர்பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here