விலையுயர்ந்த பைக்குகளை ஓட்டி விதவிதமாக சாகசம் செய்து யூடியூபில் வீடியோ வெளியிட்டு வருபவர் தான் TTF வாசன். இப்படி இருக்க அண்மையில் பைக்கை விரைவாக ஓட்டி சாகசம் செய்து விபத்தில் சிக்கியிருந்தார். இதையடுத்து வாகனத்தை விரைவாக ஓட்டி, பொதுமக்களை அச்சுறுத்துதல் செய்தல் போன்ற சில காரணங்களுக்காக போலீசார் இவரை சிறையில் அடைத்திருந்தனர்.

மேலும் தற்போது சிறையில் இருந்து வெளியே வந்த இவர் லிவிங் டூகெதர் குறித்து பேசியுள்ளார். அதாவது சிறையில் இருந்த போது இவருக்கு கல்யாண ஆசை வந்துவிட்டதாம். மேலும் 3 மாதம் லிவிங் டூ கெதரில் இருந்துவிட்டு தான் திருமணம் செய்து கொள்வாராம். ஏனென்றால் காதல், கல்யாணம் குறித்து தனக்கு அனுபவம் இருந்தால் இந்த முடிவை தான் எடுத்திருப்பதாக கூறியுள்ளார்.