அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடை – டிரம்ப் முடிவு!!

0
trump
trump

டிக் டாக் செயலி அமெரிக்காவிலும் தடை செய்யப்படலாம் என அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

சீன செயலிகளுக்கு தடை..!

இந்தியா – சீனா எல்லைப் பிரச்சினை தீவிரமடைந்துள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் சீன தயாரிப்புகளுக்கும் எதிர்ப்பு கிளம்பியது. சீனாவைச் சேர்ந்த டிக் டாக், ஹலோ, யூசி பிரவுசர் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சமீபத்தில் 47 சீன ஆப்களுக்கு இந்திய அரசு தடை விதித்தது. இந்த செயலிகள் ஏற்கெனவே இந்தியாவில் தடை செய்யப்பட்ட 59 செயலிகளின் குளோன்களாக செயல்பட்டவையாகும்.

china apps
china apps

இந்தியாவைக் காட்டிலும் சீனாவை பல்வேறு விஷயங்களில் வெளிப்படையாக எதிர்த்துவரும் அமெரிக்காவும் சீன செயலியான டிக் டாக்கிற்கு தடை விதிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடை..?

இதையடுத்து வாஷிங்டனில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியதாவது, டிக் டாக் செயலியை கவனித்து வருவதாகவும் அதற்கு தடை விதிக்கலாம் அல்லது வேறு சில நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான திட்டங்களும் உள்ளன என்று தெரிவித்துள்ளார்.

கொரோனாவை தடுக்க மாஸ்குகளை பெட்ரோல் விட்டு கழுவுங்கள் – பிலிபைன்ஸ் ஜனாதிபதி!!

சீனாவின் பைட் டான்ஸுக்கு உத்தரவிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதன் பின்னர் டிரம்ப் இது குறித்துப் பேசியுள்ளார் மைக்ரோசாப்ட் மென்பொருள் நிறுவனம் இந்த ஆப்பை வாங்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் நேற்று தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இந்தியாவைப் போல அமெரிக்காவிலும் டிக் டாக் ஆப் விரைவில் தடை செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here