Wednesday, March 27, 2024

கொரோனா பாதித்த அதிபர் டொனால்ட் டிரம்ப் ராணுவ மருத்துவமனையில் அனுமதி!!

Must Read

கொரோனா தொற்றிற்கான எந்த ஒரு அறிகுறியும் தனக்கு இல்லை என்று கூறி வந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் காய்ச்சல் அறிகுறி தென்பட்டதால் தற்போது ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொற்று பாதிப்பில் முதல் இடம்:

கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் உள்ள உஹான் மாகாணத்தில் இருந்து கொரோனா என்ற நோய் தொற்று உலக நாடுகளுக்கு பரவியது. இந்த நோய் தொற்றினால் அமெரிக்கா அதிகமாக பாதிக்கப்பட்டது. தற்போது உள்ள நிலவரப்படி 16 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு நாளைக்கு 13 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

donald trump
donald trump

இப்படியான நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் அமெரிக்க அதிபர் டிரம்பின் உதவியாளர் ஹோப் ஹிக்சுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர் அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியாவுடன் தான் இருப்பார். அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ஆகிய இருவருக்கும் திங்கள் கிழமை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதிர்ச்சி முடிவுகள்:

அதற்கான முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. அதில் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் இருவரும் தங்களை தனிமைப்படுத்தி கொள்வதாக அறிவித்தனர். கொரோனாவிற்கான எந்த அறிகுறிகளும் டிரம்ப் தனக்கு இல்லை என்று கூறி வந்த நிலையில் தற்போது அவருக்கு நோய் அறிகுறியாக லேசான காய்ச்சல் தென்படுவதாக கூறியுள்ளார்.

இந்தியாவில் மொபைல் போன்கள் விலை உயர வாய்ப்பு – ICEA அதிர்ச்சி தகவல்!!

இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அலபாமா மாகாணத்தில் உள்ள வால்டர் ரேட் தேசிய ராணுவ மருத்துமனையில் டிரம்ப் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கெய்லி மெக்யெனனி தெரிவித்துள்ளார். டிரம்ப் “மகத்தான ஆதரவு தந்த அனைவருக்கும் எனது நன்றிகள். நான் வால்டர் ரீட் மருத்துவமனைக்கு செல்ல உள்ளேன். நான் நன்றாக தான் இருக்கிறேன்.” இவ்வாறு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு: அதிகாரிகளுக்கு எதிரான நடவடிக்கை விவரம்., ஐகோர்ட் அதிரடி உத்தரவு!!!

கடந்த 2018 ஆம் ஆண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் மேற்கொண்டவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். அதில் 100க்கும் மேற்பட்டோர் காயம்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -