40 வயதாகியும் மார்கெட் குறையாத அந்த தமிழ் நடிகை… இப்போ புதுசா வேற ஒரு படத்தில கமிட் ஆகிருக்காங்களாமே!!!

0

தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகையாக வலம் வருபவர் திரிஷா. இவர் சினிமாவிற்கு நுழைந்து  பல வருடங்கள் ஆன போதிலும் அவருக்கு இன்னும் சினிமாவில்  மார்க்கெட் குறையவில்லை. அதாவது நடிகை திரிஷா தற்போது  புனித் ராஜ்குமார் அவர்களுடன் த்விட்வா என்ற படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

நடிகை திரிஷா 1999 ஆம் ஆண்டு காதல் இளவரசன் பிரசாந்த் மற்றும் சிம்ரன் அவர்களின் நடிப்பில் வெளிவந்த ஜோடி படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தின்  மூலம்  தமிழ் திரைக்கு வந்தார். அதை தொடர்ந்து மௌனம் பேசியதே என்ற சூர்யா படத்தில் ஒரு கதாநாயகியாக நடித்தார். அதன் பிறகு பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். சாமி, கில்லி, திருப்பாச்சி, ஆறு, கிரீடம் உள்ளிட்ட இவரின் பல தமிழ் படங்கள் வசூல் சாதனை படைத்தவை.

மேலும் இவர்  ரஜினி, கமல், அஜித், விஜய் உட்பட பல தமிழ் முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ் பெற்றவர். இவர் தமிழை தவிர்த்து பல மொழி படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் கன்னடத்தில் நடித்த முதல் படம் பவர். இந்த படத்தில் புனித் ராஜ்குமார் அவர்களுடன் ஜோடியாக நடித்திருப்பார்.

இந்நிலையில் இந்த ஜோடி ஏழு வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் இணைய உள்ளது. அதாவது த்விட்வா என்று பெயர் சுடப்பட்டு உள்ள இந்த கன்னட படத்திற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த படத்தில் ஹீரோவாக புனித் ராஜ்குமார் அவர்களும் ஹீரோயினாக திரிஷாவும் கமிட் ஆகியுள்ளனர்.மேலும் இந்த படத்தை இயக்குனர் பவன் குமார் இயக்க உள்ளார். வயது அதிகமானாலும் மார்க்கெட் சரியாத தமிழ் நடிகையாக வலம் வருகிறார் நடிகை திரிஷா.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here