அனில் கும்ப்ளேவை கழட்டிவிட்ட பஞ்சாப் அணி.., அவரின் இடத்தை பறித்த இலங்கை முன்னாள் வீரர்!!

0
அனில் கும்ப்ளேவை கழட்டிவிட்ட பஞ்சாப் அணி.., அவரின் இடத்தை பறித்த இலங்கை முன்னாள் வீரர்!!
அனில் கும்ப்ளேவை கழட்டிவிட்ட பஞ்சாப் அணி.., அவரின் இடத்தை பறித்த இலங்கை முன்னாள் வீரர்!!

பஞ்சாப் கிங்ஸ் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் நியமிக்கப்பட்டுள்ளார்.

IPL அப்டேட்!!

ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி இதுவரை ஒரு முறை கூட பட்டத்தை வென்றதில்லை. மேலும் இந்த அணி கடந்த 2014 ஆம் ஆண்டு பைனல் வரை முன்னேறியது. ஆனால் இறுதி போட்டியில் வெற்றி பெற முடியாமல் பட்டத்தை தவறிவிட்டது. இந்த அணிக்கு இதுவரை பயிற்சியாளராக இருந்த அனில் கும்ப்ளே மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அனில் கும்ப்ளே பயிற்சியில் பஞ்சாப் அணி பெரிதாக வெற்றி காணவில்லை.

இதனால் தான் இவரை நீக்கிவிட்டு புதிய பயிற்சியாளராக டிரெவர் பேலிஸை நியமித்துள்ளனர். இந்த அறிவிப்பை பஞ்சாப் கிங்ஸ் உரிமையாளர்கள் தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர். பேலிஸ் ஒரு காலத்தில் சர்வதேச போட்டிகளில் இலங்கை அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனாக விளையாடி வந்தவர். சர்வதேச தொடர்களில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு தற்போது ஒரு சிறந்த பயிற்சியாளராக வலம் வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் இவர் IPL லில் சன் ரைசர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது பயிற்சியின் மூலம் இங்கிலாந்து அணி கடந்த 2019 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கான பட்டத்தை வென்றுள்ளது. இந்நிலையில் டிரெவர் பேலிஸ் “பஞ்சாப் கிங்ஸ் அணியில் தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்பதில் பெருமை அடைகிறேன் என கூறியுள்ளார். மேலும் அடுத்த ஆண்டு IPL சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணி சிறந்த கம்பேக் கொடுக்கும் என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here