இனி என்னை பேட்டிங்கிற்கு அனுப்பாதீங்க – கதறும் மும்பை இந்தியன்ஸ் வீரர்!!

0
mi

நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்துடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி இந்த தொடரில் விளையாடிய 2 போட்டிகளில் 1 வெற்றி மற்றும் 1 தோல்வி அடைந்துள்ளது. இந்நிலையில் மும்பை அணியின் நட்சத்திர வீரர் இனி என்னை பேட்டிங்கிற்கு அனுப்பாதீர்கள் என்று கூறியுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ்:

இதுவரை ஐபிஎல் வரலாற்றில் மொத்தம் 5 முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. இந்த அணி அனைத்து இளைஞர்களுக்கு வாய்ப்பளித்து அவர்களின் திறமையை வெளிப்படுத்துவதற்கு மிக உதவிகரமாக இருக்கிறது. இந்த அணி மூலம் இந்திய அணிக்கு வந்தவர்கள் தான் பும்ராஹ், ஹர்டிக் மற்றும் க்ருனால் பாண்டியா. இந்த அணியில் உள்ள அனைத்து வீரர்களும் மிக்க வலிமையானவர்களே.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் இந்த தொடரில் மும்பை அணி நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்துடன் களமிறங்கியுள்ளது. இந்த அணி இதுவரை விளையாடிய 2 போட்டிகளில் 1ல் வெற்றி மற்றும் 1ல் தோல்வி அடைந்துள்ளது. கடைசியாக நடைபெற்ற கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி கடைசி கட்டத்தில் மிக சிறப்பாக செயல்பட்டு தனது வெற்றியை பதிவு செய்தது. இதற்கு முக்கிய காரணம் ராகுல் சாகர், க்ருனால், பும்ராஹ் மற்றும் போல்ட்.

mi
mi

இவர்களின் அசத்தலான பந்துவீச்சினால் மட்டுமே மும்பை அணி அன்று வெற்றியை பதிவு செய்திருந்தது. இந்நிலையில் ட்ரெஸ்ஸிங் ரூமில் மும்பை வீரர்கள் வெற்றியை கொண்டாடினர். அப்போது வீரர்கள் அனைவரும் தங்களது கருத்தை தெரிவித்து மகிழ்ந்தனர். அன்றைய தினத்தில் பேட்டிங் போது மும்பை வீரர் போல்ட் பேட்டிங் செய்யும் நிலை ஏற்பட்டது. ஆனால் அவர் பந்துகளை எதிர்கொள்ளவில்லை.

mi
mi

அட்டமிழந்த கோஹ்லி ஆத்திரத்தில் செய்த செயல் – ஐபிஎல் நிர்வாகம் கண்டனம்!!

இதுகுறித்து பேசிய போல்ட், தயவுசெய்து என்னை பேட்டிங் செய்ய அனுப்பாதீர்கள். எனக்கு பேட்டிங் செய்ய பிடிக்காது என்று நகைச்சுவையாக கூறியுள்ளார். இதற்கு ட்ரெஸ்ஸிங் ரூமில் உள்ள அனைவரும் சிரித்தனர். இதன் மூலம் போல்ட்க்கு பேட்டிங் செய்வது பிடிக்காது என்று அனைவருக்கும் தெரியவந்துள்ளது. தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி அடுத்ததாக வருகிற 17ம் ஐதராபாத் அணியை எதிர்கொள்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here