மகனின் பிறந்த நாளை கொண்டாடிய பிரபல நடிகையின் முன்னாள் கணவர் – யாருனு நீங்களே பாருங்க!!

0

அமலாபால் அவர்களின் முன்னாள் கணவர் மற்றும் பிரபல திரைப்பட இயக்குனருமான ஏ.எல்.விஜய் அவர்கள் தனது மகனது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

பிறந்த நாள் புகைப்படம்:

முன்னணி இயக்குனரான ஏ.எல்.விஜய் தனது ஆரம்ப கட்டத்தில் ப்ரியதர்ஷன் அவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். அதன் பின் படிப்படியாக உயர்ந்து இயக்குனரானவர். கிரீடம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி மதராசபட்டினம் போன்ற காவியங்களை படைத்தவர்.

அதன் பின் சீயான் விக்ரம் அவர்களை வைத்து தெய்வத்திருமகள் மற்றும் தாண்டவம் என இரு படங்களை இயக்கினார். தலைவா படத்தின் மூலம் அமலா பால் அவர்கள் மீது காதல் கொண்டு திருமணம் செய்து கொண்டார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஒரு சில கருத்து வேறுபாட்டின் காரணமாக இருவரும் பிரிந்து தங்கள் வாழ்க்கையை வாழ துவங்கினர். அதன் பின் திருமணம் செய்து கொண்ட ஏ.எல்.விஜய் அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. தற்போது அவரது மகனுக்கு பிறந்த நாள் கொண்டாடியபோது எடுத்த புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டுள்ளார். அது ரசிகர்களால் வைரல் ஆக்கப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here