இதையெல்லாம் எடுத்துட்டு போக மறந்துடாதீங்க..! டி.ஆர்.பி தேர்வுக்கு 24 புதிய கட்டுப்பாடுகள் – குரூப் 4 முறைகேடு எதிரொலி..!

0

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் பணியாளர் தேர்வுக்கான புதிய கட்டுப்பாடுகளை டி.ஆர்.பி வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில் நாளை துவங்கும் வட்டார கல்வி அலுவலர் பணிக்கான இணையவழி தேர்வு தொடர்ந்து மூன்று நாட்களுக்கு நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுக்காக 57 மையங்கள் ஏற்கனவே முழுவீச்சில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.

குரூப் 4 முறைகேடு:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வில் முறைகேடு நடைபெற்றது கண்டுபுடிக்கப்பட்டு இதுவரை 40க்கும் மேற்பட்டோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது சிபிசிஐடி. தமிழகத்தை உலுக்கிய இந்த முறைகேட்டினால் தேர்வர்கள் அனைவரும் அரசு இயந்திரத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் உள்ளனர். இதனால் இனி வரும் அரசுத்தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெறாமல் இருக்க தமிழக அரசு புதிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

என்னென்ன கட்டுப்பாடுகள்:

டி.ஆர்.பி நடத்தும் இந்த தேர்வில் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க நீட் தேர்வுக்கு இணையாக முன்னேற்பாடுகள் மட்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

  • ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யப்படும் கடவுச்சீட்டு (ஹால் டிக்கெட்) கொண்டு வந்தால் மட்டுமே தேர்வறைக்குள் அனுமதிக்கப்படுவர்.
  • ஹால் டிக்கெட்டில் இருக்கும் புகைப்படத்துடன் தேர்வெழுத வரும் தேர்வரின் முகம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
  • தேர்வர்கள் தங்களுடன் லைசென்ஸ், வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட் அல்லது பான் கார்டு ஆகியவற்றில் ஒன்றை கட்டாயம் எடுத்து வர வேண்டும்.
  • தேர்வு மையத்திற்குள் நகை, வாட்ச் பெல்ட், ஷு, ஹீல்ஸ் செருப்பு அணிந்து செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
  • மேஜிக் பேனா போன்ற மோசடியில் இருந்து பாதுகாக்க தேர்வர்களுக்கு பேனா தேர்வறையில் டி.ஆர்.பி மூலம் வழங்கப்படும். அவர்களே கொண்டு வர அனுமதி இல்லை.
  • தேர்வர்களுக்கு அவர்கள் எழுத உள்ள தேர்வு மையங்களின் விபரம் 3 நாட்களுக்கு முன்பாக மட்டுமே அவர்களுக்கு தெரியப்படுத்தப்படும்.
  • தேவர்கள் தங்கள் விருப்ப தேர்வு மையமாக தேர்வு செய்துள்ள மையங்களை தவிர்த்து வேறு இடங்களில் அவர்களுக்கு தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்படும். உதாரணமாக தூத்துக்குடி, திருநெல்வேலி போன்ற பகுதிகளில் இருந்து அருகே உள்ள மாவட்டங்களை தேர்வு செய்தவர்களுக்கு சென்னை, காஞ்சிபுரம் போன்ற பகுதிகளும், அதேபோல கோயம்புத்தூரை சேர்ந்தவர்களுக்கு கரூர், திருச்சி போன்ற மாவட்டங்களையும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இது போன்ற 24 புதிய கட்டுப்பாடுகளை டி.ஆர்.பி வகுத்து வெளியிட்டு உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here