பேருந்துகளில் திருநங்கைகளுக்கு இலவச பயணம்?? முதல்வரின் அடுத்த அதிரடி!!

0

தமிழகத்தில் முதல்வராக பதவியேற்றுள்ள திமுக தலைவர் ஸ்டாலின் பல்வேறு கட்ட அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் திருநங்கைகள் பயனடையும் வகையில் ஓர் அறிவிப்பு விரைவில் வெளியாக போவதாக தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளது.

பேருந்துகளில் இலவசம்:

தமிழகத்தில் நேற்று(மே 7) தமிழகத்தின் புதிய முதல்வராக முதன்முறையாக திமுக தலைவர் ஸ்டாலின் பதவி ஏற்றார். அவர் பதவி ஏற்ற முதல் நாளிலே முக்கிய ஐந்து கோப்புகளில் கையெழுத்திட்டார். அது என்னவென்றால் பெண்களுக்கு நகர பேருந்துகளில் இலவச பயணம், கொரோனா நிவாரண தொகையாக ரூ.4000, ஆவின் பால் விலை குறைப்பு உள்ளிட்ட ஐந்து அறிக்கைகளை வெளியிட்டார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அவை அனைத்தும் மக்களுக்கு பயனுள்ளதாக இருப்பதால் மக்கள் அனைவரும் உற்சாகமடைந்து வருகின்றனர். மேலும் பெண்களுக்கு அறிவித்த நகர பேருந்துகளில் இலவச பயண சலுகை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் ட்விட்டர் பக்கத்தில் திருநங்கைகள் பல கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.

36 ஆயிரத்தை தாண்டிய ஆபரணதங்கத்தின் விலை – சோகத்தில் நகைப்பிரியர்கள்!!

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

தற்போது தமிழக முதல்வரின் கவனம் அதன் பக்கம் திரும்பியுள்ளது. எனவே நகர பேருந்துகளில் திருநங்கைகளுக்கு இலவச பயணம் அளிப்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்று அதிரடியாக தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். மேலும் மகளிர் நலன் மற்றும் உரிமை அதனுடன் திருநங்கை வாழ்வை இணைத்து பார்ப்பது தான் திமுக அரசு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here