ரயில் பயணிகள் கவனத்திற்கு – டிக்கெட் குறித்த புதிய விதிமுறைகளை வெளியிட்ட மத்திய அரசு!!

0

ரயில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள், தாங்கள் முன்பதிவு செய்யும் டிக்கெட்டை ரத்து செய்து  பணத்தைப் பெற விரும்பினால், கண்டிப்பாக இந்த முறை செயல்படுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசு அறிவிப்பு:

இந்தியாவில் பயணம் மேற்கொள்ளும் பொதுமக்கள் பெரும்பாலும், ரயில் பயணத்தையே அதிகம் தேர்ந்தெடுக்கின்றனர். பண்டிகை காலம், தொடர் விடுமுறை காலம் என வந்துவிட்டால் பொதுமக்கள் டிக்கெட் எடுப்பதே பெரும்பாடாகி விடுகிறது. இந்த கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக, பெரும்பாலான பயணிகள் டிக்கெட் முன்பதிவு திட்டத்தை பயன்படுத்துகின்றனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ரயில்களில் மீண்டும் தொடங்கப்பட்ட அதிரடி திட்டம் - உச்சகட்ட மகிழ்ச்சியில் பயணிகள்!!

இதன்படி, டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கான புதிய விதிமுறைகளை மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதன் படி முதல் வகுப்பு மற்றும் ஏசி வகுப்பு ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துவிட்டு, தவிர்க்க முடியாத காரணங்களுக்காக அதை ரத்து செய்பவர்களுக்கு 5% ஜிஎஸ்டி கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உறுதி செய்யப்பட்ட ரயில் டிக்கெட் என்பது, பயணிக்கும் ரயில்வேக்கும் இடையேயான ஒரு ஒப்பந்தமாக கருதப்படுவதால், ரத்து செய்யும் பயணிகளிடம் கண்டிப்பாக கட்டணம் வசூலிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here