தமிழ்நாட்டின் விரைவு ரயில்களின் வேகம் அதிகரிப்பு.., பயணிகளின் வசதிக்காக தென்னக ரயில்வேவின் சிறப்பு ஏற்பாடு!!!

0
தமிழ்நாட்டின் விரைவு ரயில்களின் வேகம் அதிகரிப்பு.., பயணிகளின் வசதிக்காக தென்னக ரயில்வேவின் சிறப்பு ஏற்பாடு!!!
தமிழ்நாட்டின் விரைவு ரயில்களின் வேகம் அதிகரிப்பு.., பயணிகளின் வசதிக்காக தென்னக ரயில்வேவின் சிறப்பு ஏற்பாடு!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் தொலைதூர பயணங்களுக்கு ரயில் சேவையை விரும்புகின்றனர். இதனால் மக்கள் விரைவு பயணங்களை மேற்கொள்ளும் வகையில் தமிழ்நாட்டின் முக்கிய ரயில்களின் வேகத்தை ரயில்வே நிர்வாகம் அதிகரித்துள்ளது. அண்மையில் இதற்கான சோதனை ஓட்டம் சென்னை சென்ட்ரல் to கூடூர், அத்திப்பட்டு மற்றும் சென்னை to அரக்கோணம் to ரேணிகுண்டா ஆகிய வழித்தடங்களில் நடைபெற்றது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனை தொடர்ந்து சென்னை to கூடூர் மற்றும் சென்னை to ரேணிகுண்டா ஆகிய 2 வழித்தடங்களில் ரயில்களை 130 கி.மீ. வேகம் வரை இயக்க தென்னக ரயில்வேதுறை முடிவு செய்துள்ளது. மேலும் விருத்தாசலம் to சேலம், விழுப்புரம் to புதுச்சேரி, மதுரை to திருநெல்வேலி என தமிழ்நாட்டின் 9 வழித்தடங்களில் 110 கி.மீ. வேகம் வரை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தீவிரமடையும் மெட்ரோ பணி.., இந்த முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்.., காவல்துறை அறிவிப்பு!!!

அதேநேரத்தில் பொதுமக்கள் அனுமதியின்றி கடக்கும் ரயில் பாதைகளில் தடுப்பு சுவர் உள்ளிட்ட பணிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் இருந்து ஜோலார்பேட்டை, பெங்களூர், மும்பை ஆகிய வழித்தடங்களில் செல்லும் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க திட்ட அறிக்கையை மத்திய அரசு ஒப்புதலுக்கு சமர்பிக்கப்பட்டுள்ளதாகவும் தென்னக ரயில்வே நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here