தமிழக ரயில் சேவைகள் ரத்து – காரணம் இது தான்! முழு விவரம்!

0
தமிழக ரயில் சேவைகள் ரத்து - காரணம் இது தான்! முழு விவரம்!
தமிழக ரயில் சேவைகள் ரத்து - காரணம் இது தான்! முழு விவரம்!

தமிழகத்தில் ரயில் பொறியியல் பணிகள் காரணமாக முக்கிய வழித்தட ரயில்கள் ரத்து செய்யப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் ரத்து செய்யப்பட்ட ரயில்கள் குறித்த விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது.

ரயில்கள் ரத்து:

இந்தியாவில் பரவிய கொரோனா இரண்டாம் அலை காரணமாக கடந்த ஏப்ரல், மே மாதத்தில் விதிக்கப்பட்ட ஊரடங்கால், பெரும்பாலான ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. இதனால் ரயில்வேத்துறை பெரும் சரிவை சந்தித்து. நாட்டில் ரயில் சேவை என்பது அத்தியாவசிய சேவையில் ஒன்றாக இருப்பதால் கொரோனா பாதிப்புகள் சற்று குறைய ஆரம்பித்ததும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ரத்து செய்யப்பட்ட ரயில்கள் மீண்டும் இயக்கப்பட்டது. மேலும் கொரோனா பாதிப்பு முழுமையாக குறையாமல் உள்ளதால் கூட்டம் கூடுவதை தவிர்க்க முன்பதிவு அடிப்படையில் மட்டுமே ரயில் பயணிகள் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

இந்த முன்பதிவு முறையில் பல்வேறு இடர்பாடுகளை இருந்த நிலையில் முன்பதிவில்லா ரயில்களை இயக்க பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதன் அடிப்படையில் தற்போது முன்பதிவில்லா பெட்டிகளும் ரயிலில் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில் பயணிகள் சிரமமின்றி பயணிக்கும் வகையில் கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. தொடர்ச்சியான பாதுகாப்பான ரயில் இயக்கத்தை உறுதிப்படுத்த அவ்வப்போது பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் தற்போது மகாராஷ்டிரா மாநிலம், சோலாப்பூர் மாவட்டம் பிக்வான் – வாஷிம்பே ரயில் நிலையங்களுக்கு இடையே நடைபெற உள்ள பொறியியல் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் தமிழகத்தில் முக்கிய வழித்தட ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளது. அதாவது நாளை (ஆகஸ்ட் 5) கோவை – ராஜ்கோட் வாராந்திர விரைவு ரயில் மற்றும் ஆகஸ்ட் 7ம் தேதி ராஜ்கோட் – கோவை வாராந்திர விரைவு ரயில்கள் ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆகஸ்ட் 9ம் தேதி இயக்கப்பட இருந்த கன்னியாகுமரி – புனே ரயிலும் ரத்து செய்யப்பட உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here