தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நாளை மறுநாள் (நவம்பர் 12) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட நகரங்களில் தங்கி பணிபுரிபவர்கள் பலரும் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். இவர்கள் நெரிசலில் சிக்காமல் பயணம் மேற்கொள்ள தமிழ்நாடு அரசு சிறப்பு பேருந்துகளை இயக்கினாலும் பெரும்பாலானோர் ரயில் பயணங்களையே அதிகம் விரும்புகின்றனர்.
இந்த நிலையில் ரயிலில் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு தெற்கு ரயில்வே எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது ரயில் பயணிகள் எக்காரணம் கொண்டும் ரயிலில் பட்டாசுகளை எடுத்து செல்ல கூடாது. அப்படி ரயில்வே விதிகளை மீறி பட்டாசுகளை எடுத்து செல்வது தெரிய வந்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.” என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.